ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மற்ற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்க்க முயற்சி: ஆளுநர் ஆர்.என்.ரவி

மற்ற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்க்க முயற்சி: ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன் இரும்பை உருவாக்கி பயன்படுத்தி உள்ளனர் என்பதை தொல்லியல் ஆய்வுகள் உறுதிபடுத்தி இருப்பது பெருமை என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழ் மொழியை மற்ற மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் தமிழை பிற மாநிலங்களில் மூன்றாவது மொழியாக சேர்க்க முயற்சி செய்வேன் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

  சென்னை பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் இன்று நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் கலந்துகொண்டனர். பட்டமளிப்பு விழாவில் நேரடியாக பட்டம் பெற்ற 931 நபர்களுக்கும் ஆளுநர்,முதல்வர் ஆகியோர் ஒன்றே கால் மணி நேரம் நின்று கொண்டு அனைவருக்கும் பட்டங்களை வழங்கினார்கள்.

  பட்டமளிப்பு  விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “ பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்; இந்த நாள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும். பெருமைமிக்க சென்னை பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்றுள்ளீர்கள்  என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள்.

  உலகில் புழக்கத்தில் உள்ள மிகவும் தொன்மையான மொழி தமிழ். தமிழ் சென்றடைய இடங்களுக்கு அம்மொழி சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் வர வேண்டும். தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இதையும் படிங்க: எனது ஆட்சியில் உயர்கல்வித்துறை பொற்காலமாக திகழும்... உறுதுணையாக இருக்கும் ஆளுநருக்கு நன்றி - முதல்வர் ஸ்டாலின்

  தமிழர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன் இரும்பை உருவாக்கி பயன்படுத்தி உள்ளனர் என்பதை தொல்லியல் ஆய்வுகள் உறுதிபடுத்தி இருப்பது பெருமை. மற்ற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக  சேர்ப்பதற்கு முயற்சி செய்வேன்.  கல்வி,தொழில்,மருத்துவ ஆகிய துறைகளில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக உள்ளது’ என பேசினார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: RN Ravi, Tamil, Tamil Nadu Governor