தேர்தல் அன்று பள்ளிகள் இயங்கினால் நடவடிக்கை: தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

சென்னையில் சில தனியார் பள்ளிகள் வாக்குப் பதிவு நடைபெறும் நாளான 18-ம் தேதி இயங்க உள்ளதாக புகர்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் அன்று பள்ளிகள் இயங்கினால் நடவடிக்கை: தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: April 2, 2019, 2:40 PM IST
  • Share this:
ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் அன்று தனியார் பள்ளிகள் இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையரும் தேர்தல் மாவட்ட அதிகரியுமான கோ.பிரகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில் அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அனைத்து தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு பொதுவிடுமுறை நாளாக அறிவித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் சில தனியார் பள்ளிகள் வாக்குப்பதிவு நடைபெறு ம் நாளான 18-ம் தேதி இயங்க உள்ளதாக புகர்கள் எழுந்துள்ளன. தேர்தல் நாளான ஏப்ரல் 18 -ம் தேதி அன்று தனியார் பள்ளிகள் இயங்கினால், அந்தப் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அன்றைய தினம் பொது விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Also see... அமேதி, வயநாடு என 2 தொகுதிகளில் ராகுல் போட்டி!தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.ஐபிஎல் தகவல்கள்:

First published: April 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading