Home /News /tamil-nadu /

தமிழகத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி!

தமிழகத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி!

நிபா வைரஸ்

நிபா வைரஸ்

கேரளா-தமிழகம் எல்லையில் உள்ள 7 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
தமிழகத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கலமச்சேரி மருத்துவமனையில் கல்லூரி மாணவர் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள எல்லையையொட்டி உள்ள, தேனி மாவட்டம் போடிமெட்டில் சுகாதாரத்துறையினர் சார்பில் விழிப்புணர்வு முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Minister VijayaBaskar | அமைச்சர் விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜயபாஸ்கர்


இந்த முகாமில் கேரளத்தில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களில் வருவோருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என பரிசோதிக்கப்படுகிறது. அவ்வாறு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களை போடிநாயக்கனூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் நிபா தாக்குதல் இல்லை என்பதை உறுதிப்படுத்த அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்றார்.

கேரளா-தமிழகம் எல்லையில் உள்ள 7 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Also see... இப்படியும் ஒருவரா... கானா மன்னன் தேவாவின் வரலாறு!

Also see...




அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Also see...




உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Vaijayanthi S
First published:

Tags: Minister Vijayabaskar, Nipah Virus, Tamil Nadu

அடுத்த செய்தி