ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அ.தி.மு.கதான் ஹீரோ; 2021 கிளைமேக்ஸில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்! அமைச்சர் ஜெயக்குமார் உற்சாகம்

அ.தி.மு.கதான் ஹீரோ; 2021 கிளைமேக்ஸில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்! அமைச்சர் ஜெயக்குமார் உற்சாகம்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 124-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையிலுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு தமிழக அரசின் சார்பில் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின், தமிழக பாடநூல் கழகத் தலைவர் வளர்மதி, முன்னாள் தென் சென்னை மக்களவை உறுப்பினர் ஜெயவர்த்தனன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறை மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் அடிமட்ட தொண்டன் கூட கொடி கட்டிய காரில் வர முடியும். நாங்கள் எல்லாம் மிட்டா மிராசு கிடையாது. முதலமைச்சர் தான் சொன்ன வார்த்தைக்கு எடுத்துக்காட்டாக அவரே உள்ளார் என்றார்.

  அ.தி.மு.கவில் கடைக்கோடி தொண்டன் கூட பதவிக்கு வரமுடியும். ஆனால், தி.மு.க தலைவராக துரைமுருகனை ஸ்டாலின் அறிவிப்பாரா ? என்று கேள்வி எழுப்பினார். கடைக்கோடி தொண்டனும் தலைமைக்கு வரலாம் என்பது தி.மு.கவில் சாத்தியமில்லை எனவும் தந்தைக்கு பின் மகன், உதயநிதிக்கு பேரன் வந்தால் அவருக்கு என வாரிசு என  தொடரும் என்றார்.

  மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வந்ததே தி.மு.க தான். திருடிவிட்டு திருடர்களே திருடன் திருடன் என்று ஓடுவதுபோல் உள்ளது இந்த போராட்டம் என தெரிவித்தார். தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் என்பது இடைவேளை, சட்டமன்றத் தேர்தல் தான் கிளைமேக்ஸ் என்று ஸ்டாலின் கூறியுள்ளதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் அ.தி.மு.கதான் ஹீரோ. 2021 கிளைமாக்சில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்றார்.

  மேலும் நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. நீட் தேர்வினை தேர்வுத்துறை கொண்டு வருகிறது. தடுக்க நாங்களும் போராடுகிறோம் ஆனால் முடியவில்லை. இதனால் அடுத்த ஆண்டு முதல் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்போம் என்றார். அதேபோல, டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் யார் ஈடுபட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

  Also see:

   

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: AIADMK, Jayakumar, MKStalin