என்னை இரண்டாக வெட்டினால் மட்டுமே நாம் தமிழர் கட்சியில் பிளவு ஏற்படும்: சீமான்

Youtube Video

தன்னை இரண்டாக வெட்டினால் மட்டுமே நாம் தமிழர் கட்சியில் பிளவு ஏற்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

 • Share this:
  கட்சியிலிருந்து முக்கிய நபர்கள் விலகல், கட்சி இரண்டாக உடைகிறது என கடந்த சில நாட்களாக பேசு பொருளாக மாறியுள்ளது நாம் தமிழர் கட்சி. அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான கல்யாணசுந்தரம் வெளியேறப்போவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின, அக்கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ராஜீவ் காந்தி அக்கட்சியிலிருந்து விலகுவதாக ட்விட்டரில் அறிவித்துள்ளனார்.

  இந்நிலையில் நியூஸ் 18 தொலைக்காட்சியின் வெல்லும் சொல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சீமான் தன்னை இரண்டாக வெட்டினால் மட்டுமே நாம் தமிழர் கட்சியில் பிளவு ஏற்படும் என கூறியுள்ளார்.

  தன் மீதான தேச துரோக வழக்கில் கைது செய்யப்படுவதற்கு தான் அஞ்சவில்லை என்றும், சிறையில் இருந்து கொண்டே தன்னால் தேர்தலை சந்திக்க முடியும் என்றும் சீமான கூறினார்

  ராமதாஸ், வைகோ, திருமாவளவன் ஆகியோர் வேறு வழியின்றி திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளதாகவும் அதனாலேயே அவர்கள் சமரசம் செய்துகொள்ள நிர்பந்திக்கப்படுவதாகவும் சீமான் கூறினார். எனவே தான் தனித்தே தேர்தல் களம் காண உள்ளதாகவும் தெரிவித்தார்.  மேலும் படிக்க...மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடலுக்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி

  அண்ணாமலை போன்றவர்களை பாஜகவுக்குள் கொண்டு வருவது அக்கட்சிக்கு எந்த விதத்திலும் உதவியாக இருக்காது என்று கூறிய சீமான், படித்த இளைஞர் கட்சியில் இருக்கிறார் என்ற பிம்பத்தை மட்டுமே ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
  Published by:Vaijayanthi S
  First published: