• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஹனிமூனில் இருக்கிறார்கள்... திமுக ஆட்சி குறித்து 6 மாதம் கழித்து பேசுவேன் - குஷ்பு

ஹனிமூனில் இருக்கிறார்கள்... திமுக ஆட்சி குறித்து 6 மாதம் கழித்து பேசுவேன் - குஷ்பு

Kushboo - stalin

Kushboo - stalin

திமுக ஆட்சி தற்போது தேனிலவு காலத்தில் இருக்கிறது. இது முடிந்ததும் திமுக ஆட்சி குறித்து கருத்து தெரிவிப்பேன்.

  • Share this:
    தேன்நிலவில் திமுக ஆட்சி இருப்பதாகவும், 6 மாதத்திற்கு பிறகு ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கிறேன் என பாஜக தலைவர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

    அப்போலோ புற்றுநோய் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் சிகிச்சை குறித்த விவரங்கள் அடங்கிய புதிய வலைதளத்தை (apollocancercentres.com) பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு தொடங்கி வைத்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்சியில் அப்போலோ மருத்துவமனையின் துணை தலைவர் ப்ரீத்தா ரெட்டி, ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்வில் அப்பலோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி , காணொளி காட்சி வாயிலாக பங்கேற்று மார்பக புற்றுநோய் குறித்தான விழிப்புணர்வு செயலி குறித்து விவரங்களை தெரிவித்தார்..

    நிகழ்சியில் நிறைவாக செய்தியாளர்களை சந்தித்த
    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பேசுகையில், “மார்பக புற்றுநோய் குறித்து அலட்சியமாக இருக்க வேண்டாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்தலாம். மார்பக புற்றுநோய் தொடர்பாக பரிசோதனை செய்து கொள்ளுமாறு வீட்டிலிருக்கும் ஆண்கள் அறிவுறுத்த வேண்டும்.

    Also Read:   தலைதூக்கும் மின்வெட்டு ஆபத்து.. தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி.. சமாளிக்குமா அரசு?

    அனைத்து கட்சியினரும் கொரோனா வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு என்னுடைய நன்றி. கட்சியில் எந்த பொறுப்பும் எதிர்பாக்கவில்லை.

    தேனிலவின் திமுக ஆட்சி:

    திமுக ஆட்சி தற்போது தேனிலவு காலத்தில் இருக்கிறது. இது முடிந்ததும் திமுக ஆட்சி குறித்து கருத்து தெரிவிப்பேன் என்றார் குஷ்பு.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: