Home /News /tamil-nadu /

பல்கலைக்கழகங்க துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் தீர்மானம் : முதலமைச்சர் தகவல்

பல்கலைக்கழகங்க துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் தீர்மானம் : முதலமைச்சர் தகவல்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

Tamil Nadu Assembly : வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்றக்குழு தலைவர் ஜி.கே.மணி, பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் துணைவேந்தர் நியமனம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு விரைவில் துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு பதிலளித்துப் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பல்வேறு மாநிலங்களில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடமே உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்திலும் இந்த நிலையே உள்ளது.

    துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசின் பங்கும் இருக்க வேண்டும். இதற்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்று சொன்னால், பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமித்து கொள்ள வேண்டும் என்ற முடிவு என்பதே சிறப்பாக இருக்கும். முதலமைச்சர் இது குறித்து ஆலோசித்து கொண்டிருக்கிறார். விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறினார்.

    Must Read : பொங்கல் சிறப்பு அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு நிறுத்தம்

    அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்வது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: MK Stalin, TN Assembly, Vice chancellor

    அடுத்த செய்தி