எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் கட்சி தொடங்கும் ரஜினிகாந்த்?

எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் கட்சி தொடங்கும் ரஜினிகாந்த்?

ரஜினிகாந்த்

எம்ஜிஆர் பிறந்தநாளில் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • Share this:
  எம்ஜிஆர் பிறந்தநாளான ஜனவரி 17ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மூன்றாம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என்றும், டிசம்பர் 31ல் அதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

  இந்தநிலையில், ரஜினி மக்கள் மன்றத்தினர் மூலம் கிடைக்கப்பெற்றுள்ள தகவலில், எம்ஜிஆர் பிறந்தநாளான ஜனவரி 17ம் தேதி புதிய கட்சி தொடங்கப்படும் என்கிற அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக ரஜினி அறிவிப்பார் என்று தெரியவந்துள்ளது. மேலும் மதுரை விமான நிலையம் அருகே பிரமாண்டமாக மாநாடு நடத்தவும் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

  Also read: அனைத்து ஆதி திராவிடர் காலனிகளில் இருந்து மயானம் செல்வதற்கு சாலை வசதி உள்ளதா?- நீதிமன்றம் கேள்வி

  இதற்கிடையே தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கத்தின் கடைசி பொதுக்குழு கூட்டம் ஜனவரி 3ல் திருச்சியில் கூடுகிறது. இதில், ரஜினிகாந்த் கட்சியில் காந்திய மக்கள் இயக்கத்தை இணைப்பது தொடர்பாக முடிவெடுக்கப்படுகிறது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: