• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜவ்வரிசி உற்பத்தியில் சேலத்தை சர்வதேச தரத்தில் உயர்த்துவேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

ஜவ்வரிசி உற்பத்தியில் சேலத்தை சர்வதேச தரத்தில் உயர்த்துவேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

MK Stalin

MK Stalin

இந்திய அளவில் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டினை முதலிடத்திற்கு முதல் இடத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஏற்றுமதிக் கொள்கை அமைக்கப்படும்

  • Share this:
ஜவ்வரிசி உற்பத்தியில் பெயர் பெற்று விளங்கும் சேலம் மாவட்டத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள தனியார் (ஸ்ரீ பழனி ஆண்டவர்) ஜவ்வரிசி ஆலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 1.60 கோடி ரூபாய் மதிப்பிலான, சேலம் சேகோசர்வ் நிர்வாக கட்டிடத்தில் மின் ஏல மையம் மற்றும் ஜவ்வரிசி நேரடி விற்பனை முனைய கட்டிடம்  ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

பின்னர் ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் மரவள்ளி விவசாயிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசும்போது கடந்த நான்கு மாத கால திமுக ஆட்சியில் தேர்தலின் போது அளிக்கப்பட்ட 200 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளன மக்களின் கருத்தை கேட்டு உணர்வுகளை புரிந்து ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களின் உணர்வு பெற்ற ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்பதை இன்றைய ஆட்சியின் மிக முக்கியமான கொள்கையாக உள்ளது.

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவில் வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது அதற்கு முன்னதாக பல்வேறு தரப்பினரையும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று சந்தித்து கலந்து பேசி அதற்கு பிறகுதான் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் மற்றும் மரவள்ளி விவசாயிகளை கோரிக்கைகளை கேட்டு அவை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார்.

Also Read:   ரெய்டு என்ற பெயரில் போலீசார் என் கணவரை அடித்துக் கொன்றுவிட்டு கொலையை மறைத்துள்ளனர் – மனைவி கண்ணீர்.. நடந்தது என்ன?

ஜவ்வரிசி உற்பத்தியாளர்களுக்கு புதிய சேமிப்பு கிடங்கு ஜவ்வரிசியை உணவு பொருளாக பயன்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதுடன் ஜவ்வரிசியில் கலப்படத்தை தடுக்க குழு அமைக்கப்படும் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு நியாயமான விலையில் ஜவ்வரிசி கிடைக்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று கூறினார்

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த நான்கு மாதத்தில் தமிழகத்தில் தொழில்துறை புத்துணர்வு அடைந்துள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெற்காசிய அளவில் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றிடும் வகையில் புதிய தொழில் கொள்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் புதிய தொழில்களை ஈர்க்கும் வகையில் உள் கட்டமைப்புகளை மேம்படுத்த 35 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் 17 ஆயிரத்து 149 கோடி ரூபாய் மதிப்பில் போடப்பட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Also read: ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா – அதிர்ச்சியில் பெற்றோர்கள்

இந்திய அளவில் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு மூன்றாவது பெரிய மாநிலமாக இருப்பதை குறிப்பிட்ட முதலமைச்சர் தமிழ்நாட்டினை முதலிடத்திற்கு முதல் இடத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஏற்றுமதிக் கொள்கை அமைக்கப்படும் என்றும் திருப்பூர் மதுரை கோவை உள்ளிட்ட 10 ஏற்றுமதி மையங்கள் மேம்படுத்தப்படும் என்றும் நகரம் கிராமம் வேறுபாடின்றி பெருந்தொழில் சிறுதொழில் பேதமின்றி தொழில் கொள்கை வடிவமைக்கப்பட வேண்டும் தொழிலதிபர்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கூறினார் ஜவ்வரிசி உற்பத்தி பெயர் பெற்று விளங்கும் சேலம் மாவட்டத்தை சர்வதேச தரத்தில் உயர்த்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: