ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்குமா, ரத்தாகுமா? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்குமா, ரத்தாகுமா? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடக்குமா, ரத்தாகுமா என்ற கேள்வி மாணவர்களிடம் இருந்துவரும் நிலையில், அதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கோபிச்செட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் வளாகத்தில் 2 கோடி மதிப்பிலான புதிய வேளாண்மை விரிவாக்க கட்டடப் பணி மற்றும் 172 பயனாளர்களுக்கு ஆடு மற்றும் மாடு கொட்டகை கட்டுவதற்கான ஆணையை பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.

  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், ’வெளிநாடுகளில் இருந்து புதிய வகை வைரஸ் வருவதாக கூறினாலும், ஆலயங்கள் திறக்கப்பட்டு வழிபாடு நடத்த அரசு அனுமதித்துள்ளது என்றார். அரசுப் பள்ளியில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டது என்றும் அரசு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முதலமைச்சரிடம் பேசி நல்ல முடிவெடுக்கப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

  Also read: 3 வயது குழந்தை இறந்த வழக்கில் ஓராண்டுக்கு கழித்து தாய் கைது.. சென்னை கொருக்குப்பேட்டையில் நடந்த கொடூரச் சம்பவம்

  மேலும் கூறுகையில், 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டதால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் என்றார். போன ஆண்டு கொரோனா வைரஸ் மற்றும் ஊராடங்கு அமலில் இருந்ததால் அரையாண்டு, காலாண்டு மதிப்பெண் கணக்கில் அதனால் எடுத்துகொள்ளப்பட்டது; இந்த ஆண்டு வேறு நிலை என்று செங்கோட்டையன் விளக்கமளித்தார்.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Rizwan
  First published:

  Tags: Minister sengottayan, Public exams