ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக போராட்டம் – சீமான் அறிவிப்பு

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு உத்தரவிடும் அளவிற்கு பசுமை தீர்ப்பாயம் அவ்வளவு வலிமை மிக்க அமைப்பா? என்றார் சீமான்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவிடாமல் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

  சீமான் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் எல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டது. மூடப்பட்ட ஆலையைத் திறக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு உத்தரவிடும் அளவிற்கு பசுமை தீர்ப்பாயம் அவ்வளவு வலிமை மிக்க அமைப்பா? மக்களின் எதிர்கால வாழ்விற்கு அக்கறை காட்டாமல் 3 வாரத்திற்குள் ஆலையைத் திறக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் கூறுகிறது.

  ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் தாமிரம் இந்தியாவிற்கு வழங்கப்படுகிறதா அல்லது மற்ற நாடுகளுக்கு வழங்கப்படுகிறதா? தாமிரத்துக்கு அவ்வளவு தட்டுபாடு என்றால் குஜராத்தில் ஆலையை  திறக்க வேண்டியதானே?

  தாமிர தட்டுபாட்டை பற்றிப் பேசுபவர்கள் 2020-ல் தூத்துக்குடி நிலத்தில் ஒரு சொட்டு நீர்கூட இருக்காது என்று கூறுவதைப் பற்றி சிந்திக்காதது ஏன்? நீரை சேமிக்க என்ன திட்டம் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றார் சீமான்.

  Also watch

  Published by:DS Gopinath
  First published: