• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ராமதாஸுடன் அமைச்சர்கள் சந்திப்பு? அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ம.க இணையுமா? தொடரும் இழுபறி

ராமதாஸுடன் அமைச்சர்கள் சந்திப்பு? அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ம.க இணையுமா? தொடரும் இழுபறி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் பாமக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்குமா என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

  • Share this:
    தேர்தலுக்கான கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக முதற்கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக ஈடுபட்டு வருகிறது. செவ்வாய்கிழமை மாலை திடீரென அமைச்சர் தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து 1 மணி நேரம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் வரும் 27 ம் தேதி அதிமுகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாமகவை பங்கேற்ற அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பாமக எவ்வித உத்திரவாதமும் கொடுக்காமல் டிசம்பர் 31 ம் தேதி நடைபெறவுள்ள பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு பின்பு தான் கூட்டணி குறித்தெல்லாம் முடிவு செய்யமுடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் அதிமுக பாமக இடையே கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது.

    சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி தொடர்வதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் போட்டி போட்டு அறிவித்தாலும், பாஜகவின் டெல்லி தலைமை இன்னும் எவ்வித பிடிகொடுக்காமலே இருக்கிறது. மேலும் ரஜினி கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை டிசம்பர் 31 ம் தேதி அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே பாஜக பொறுத்தவரை ரஜினி கட்சி ஆரம்பித்த பின்பு, அவருக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்தே பாஜக கூட்டணி குறித்து முடிவு எடுக்க இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

    இதனிடையே தேமுதிகவும் தங்களுக்கு 40 இடங்களுக்கு மேல் ஒதுக்கும் கட்சியிடன் தான் கூட்டணி என்று உறுதியாக தெரிவித்துள்ளது. இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்குமா என்பதிலும் குழப்பும் நீடிக்கிறது. இந்த சூழலில் தான் பாமக ஓட்டுகளை பெறுவதற்கான முயற்சியில் திமுக ஈடுபட்டு வருகிறது. இது பாமகவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் பொதுக்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவை எடுக்க பாமக எடுக்க திட்டமிட்டுள்ளது. எனவே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து போல சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்குமா என்பது கேள்வி குறியாக மாறியுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: