பணமதிப்பிழப்பு குறித்து மோடி பேசுவாரா? - ப.சிதம்பரம் கேள்வி

பிரதமர் மோடி நாடு முழுவதும் சென்று சாதனைகள் எனக் கூறிக் கொண்டு சுயதம்பட்டம் அடிக்கிறார் என்று ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்

news18
Updated: April 14, 2019, 6:24 PM IST
பணமதிப்பிழப்பு குறித்து மோடி பேசுவாரா? - ப.சிதம்பரம் கேள்வி
ப.சிதம்பரம்
news18
Updated: April 14, 2019, 6:24 PM IST
ஆட்சி போய்விடும் என்ற அச்சத்தில் நாளுக்கு நாள் பிரதமர் மோடி குரலை உயர்த்தி பேசி வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை செய்த நிலையில், அது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.

ப.சிதம்பரம், மோடி பேசாத பொருள்களைப் பட்டியலிட்டார். அதில், நீட் தேர்வு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, நெடுவாசல் எரிவாயு சோதனைத் திட்டம், அதிமுக அரசு மீது பதிவான ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்டவை குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி நாடு முழுவதும் சென்று சாதனைகள் எனக் கூறிக் கொண்டு சுயதம்பட்டம் அடிக்கிறார் என்றும் அவரது உண்மையான சாதனைகளான பண மதிப்பிழப்பு, சிறு மற்றும் குறு தொழில்களை அழித்தது, 4 கோடியே 70 லட்சம் பேர் வேலையிழந்தது, பெண்கள், தலித்துகள், சிறுபான்மையினர், பழங்குடியினர், எழுத்தாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பற்று இருப்பது ஆகியவை குறித்து பேசுவாரா என்று கேள்வி எழுப்பினார்.மேலும், பிரதமர் ஏன் நாளுக்கு நாள் குரலை உயர்த்தி பேசி வருகிறார் என கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம், தனது ஆட்சி போய்விடும் என்ற பயத்துடன் பிரசாரம் செய்வதாலா? என்றும் வினவியுள்ளார்.Also watch

First published: April 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...