தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து? நாளை முதலமைச்சர் ஆலோசனை

சிபிஎஸ்இ பொதுத்தேர்வை வைத்தே தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார்

  • Share this:
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் நாளை கலந்து ஆலோசனை நடத்திய பின் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்ர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தீவரமடைந்து வந்ததால் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது. கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே தேர்வுகள் நடத்தப்படும் என்று  தமிழக அரசு அறிவித்தது.

    பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மட்டும் மாணவர்களுக்கு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே பொதுத் தேர்வை நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி இன்று மாலை அறிவித்துள்ளார். சிபிஎஸ்இ பொதுத்தேர்வை வைத்தே தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார்.

    தற்போது சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் பொதுத் தேர்வு ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் நாளை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் பொதுத் தேர்வுகள் குறித்து முறையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Vijay R
    First published: