பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவாரா?.. உச்சநீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை..
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டணை அனுபவித்து வரும் பேரறிவாளன், தம்மை விடுதலை செய்ய கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று இறுதி விசாரணை நடத்துகிறது.

பேரறிவாளன்
- News18 Tamil
- Last Updated: January 20, 2021, 7:46 AM IST
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக, குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் தற்போது ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ளனர்.
30 ஆண்டுகளாக சிறையில் உள்ள இவர்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
மேலும் படிக்க...கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜுக்கு தீவிர சிகிச்சை... இந்த தீர்மானம் மீது மூன்று ஆண்டுகளாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், உச்சநீதிமன்றம் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நாகேஸ்வர் ராவ், அப்துல் நாசீர் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் இன்று இறுதிகட்ட விசாரணை நடைபெறவுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த விசாரணையின் முடிவில் 7 பேர் விடுதலை தொடர்பான முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
30 ஆண்டுகளாக சிறையில் உள்ள இவர்களை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
மேலும் படிக்க...கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜுக்கு தீவிர சிகிச்சை...
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்