இனி வரும் காலங்களில் கருணாநிதி தொடர்பான விழாக்களில் கலந்து கொள்வேன் - கமல்ஹாசன்
இனி வரும் காலங்களில் கருணாநிதி தொடர்பான விழாக்களில் கலந்து கொள்வேன் - கமல்ஹாசன்
கமல்ஹாசன் (கோப்புப் படம்)
கருணாநிதிக்கும், எனக்கும் உண்டான தொடர்பை உலகம் அறியும். சிலை திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டுதான் அதை நிருபிக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்றார் கமல்ஹாசன்.
‘இனி வரும் காலங்களில் கருணாநிதி தொடர்பான விழாக்களில் கலந்து கொள்வேன்’ என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்கவில்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்காக அவர் இன்று மதியம் விமானம் மூலம் மதுரை சென்றடைந்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கருணாநிதிக்கும், எனக்கும் உண்டான தொடர்பை உலகம் அறியும். சிலை திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டுதான் அதை நிருபிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இனி வரும் காலங்களில் கருணாநிதி தொடர்பான விழாக்களில் கலந்துகொள்வேன்.
சென்ற முறை கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளையும் காண முடியவில்லை. அதனால் இப்போது செல்கிறேன். சென்னை புயலோடு, கஜா புயலை ஒப்பிட முடியாது. இங்கே பாதிப்புகள் அதிகம்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி நிவாரானம் வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார் கமல்ஹாசன்.
முன்னதாக கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ’நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயுத்தப் பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. கூட்டணி பற்றி இப்போது சொல்ல முடியாது. ஊடகங்கள் தனியாக கற்பனை செய்து கூட்டணி பற்றி சொல்கின்றன. எங்களுக்கு எது நியாயம் என்றுபடுகிறதோ, மக்களுக்கு எது நல்லது என்றுபடுகிறதோ அதை தான் செய்வோம். பலரின் விருப்பத்திற்கு இணங்க செய்ய வேண்டிய அவசியமில்லை’ என்றார்.
Also watch
Published by:DS Gopinath
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.