Home /News /tamil-nadu /

அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ். நீக்கமா?

அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ். நீக்கமா?

ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம்

ADMK : அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில், பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சக்கட்ட மோதலை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரது பெயர்கள் இல்லாமல், தலைமை நிலைய செயலாளர் பெயரில் நேற்று கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்நிலையில்,  ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக சட்ட திட்ட விதி 20ஏ-வின்படி, ஒட்டுமொத்த நிர்வாக பொறுப்புகள் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே உள்ளது என்றும், அதன்படி இருவரின் ஒப்புதலை பெற்றுத்தான் கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும் கூறினார்.

    ஆனால் இருவரின் ஒப்புதலின்றி கழக தலைமை நிலைய செயலாளர் என்ற பெயரில் விதிக்கு எதிராக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றும், ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தாம் எந்தவிதமான ஒப்புதலையும் கூட்டத்துக்கு அளிக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

    மேலும், சட்டத்துக்கு புறம்பாக கூட்டப்பட்டுள்ள இக்கூட்டத்தில் ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டால், அது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நிர்வாகத்தில் இருக்கும் கழகத்தையும், தொண்டர்களையும் எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும், அதிமுக இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இன்று நடைபெறும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.

    Must Read : 11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு - ரிசல்ட் பார்க்க லிங்க் இதோ

    ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக இபிஎஸ் தரப்பு கூறிவரும் நிலையில், இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகாரம் அளிக்க இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: ADMK, Edappadi Palaniswami, EPS, O Panneerselvam, OPS

    அடுத்த செய்தி