• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றமாட்டார்கள், ஆனால் 100 நாள் ஆனதை கொண்டாடுவார்கள்: திமுகவை விமர்சித்த எல்.முருகன்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றமாட்டார்கள், ஆனால் 100 நாள் ஆனதை கொண்டாடுவார்கள்: திமுகவை விமர்சித்த எல்.முருகன்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றமாட்டார்கள், ஆனால் 100 நாள் ஆனதை கொண்டாடுவார்கள்: திமுகவை விமர்சித்த எல்.முருகன்

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றமாட்டார்கள், ஆனால் 100 நாள் ஆனதை கொண்டாடுவார்கள்: திமுகவை விமர்சித்த எல்.முருகன்

சட்டமன்ற தேர்தலில் நான்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிப் பெற்றதற்கு காரணமாக இருந்த நான்கு மாவட்ட தலைவர்களுக்கு கட்சி சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டது.

  • Share this:
தேர்தல் வாக்குறுதிகளை கூறுவார்கள் ஆனால் நிறைவேற்றமாட்டர்கள் ஆனால் ஆட்சிக்கு வந்து 100 நாள் ஆகிவிட்டதை மட்டும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.  சொல்வதை செய்வது தான் பாஜக - என திமுகவை மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சனம் செய்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நான்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிப் பெற்றதற்கு காரணமாக இருந்த நான்கு மாவட்ட தலைவர்களுக்கு கட்சி சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டது.

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்றதற்கு காரணமாக இருந்த நான்கு மாவட்ட தலைவர்களை ஊக்குவிக்கும் விதமாக கட்சி சார்பில் கார் பரிசாக வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

Also read: ஈழத்திலே முள்வேலி முகாம்கள்; தமிழகத்திலே சிறப்பு முகாம்களென்றால், இது தமிழர் நாடா? – சீமான் கேள்வி

இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் எம்.பி.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் மத்திய அமைச்சர் எல்.முருகன் மாவட்டத் தலைவர்களுக்கு கார் பரிசாக வழங்கினார்.

மேலும், கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்களான எம்.ஆர்.காந்தி (நாகர்கோவில்), நயினார் நாகேந்திரன் (திருநெல்வேலி), வானதி சீனிவாசன் (கோவை தெற்கு), சி.கே.சரஸ்வதி (மொடக்குறச்சி) ஆகியோருக்கு உறுதுணையாக இருந்து கடந்த தேர்தலில் வெற்றிப்பெற செய்த நான்கு மாவட்ட தலைவர்களான  1.மகாராஜன் - திருநெல்வேலி, 2.தர்மராஜ் -கன்னியாகுமரி, 3. சிவசுப்பிரமணியம் - ஈரோடு, 4.நந்தக்குமார் -கோவை ஆகியோருக்கு ஊக்குவிக்கும் விதமாக 4 இன்னோவா கார் பரிசாக வழங்கப்பட்டது.

தொடர்ந்து, பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன்,  தேர்தல் வாக்குறுதிகளை கூறுவார்கள், ஆனால் நிறைவேற்றமாட்டர்கள். குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் என தேர்தல் அறிக்கையில் கூறினார்கள். ஆனால் தரவில்லை, ஆனால் ஆட்சிக்கு வந்து 100 நாள் ஆகிவிட்டதை மட்டும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

பாஜக அப்படியில்லை சொன்னதை செய்வோம் அதற்கான எடுத்துக்காட்டு தான் இது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு: 

இந்தியாவில் எங்கும் இதேபோல் நடந்தது இல்லை. ஆனால் தமிழகத்தில் பாஜக கட்சி கார் பரிசாக அளிக்கிறது.
மணிப்பூர் மாநிலத்தின் கவர்னராக இல.கணேசன் அவர்களுக்கு பொறுப்பு கிடைத்துள்ளது. இது அவர் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: