2021-ல் பாஜகவினர் சட்டசபையில் இருப்பார்கள் - புதிய தலைவர் எல். முருகன் பேட்டி

2021-ல் பாஜகவினர் சட்டசபையில் இருப்பார்கள் - புதிய தலைவர் எல். முருகன் பேட்டி
எல் முருகன்
  • Share this:
தமிழக மக்கள் நலன் சார்ந்த விசயத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் எனவும் தமிழ் மக்கள் நலனுக்கு  முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவோம் எனவும் புதிதாக பதவியேற்ற பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

பா.ஜ.க மாநில தலைவராக எல்.முருகன் சென்னையில் உள்ள கமலாலயத்தில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பதவி ஏற்றார். முன்னதாக கட்சி அலுவலகம் வந்த அவருக்கு உற்சாக தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய எல்.முருகன்,
"என்னை மாநில தலைவராக நியமனம் செய்த நட்டா , அமித்ஷா, மோடி மற்றும் அனைத்து பா.ஜ.க தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி" எனக் கூறினார்.


பத்திரிகை நண்பர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நடவடிக்கையை தொடங்கி உள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள அனைத்து பூத்துகளிலும் பிரதான கட்சியாக பா.ஜ.கவை கொண்டு செல்ல உள்ளதாகவும். அனைத்து மக்களிடம் கட்சியை கொண்டு செல்லும் பணியில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

நேர்மறையான அரசியலை பா.ஜ.க செய்து வருவதாகவும், எனவே சவால் என்று எதையும் எடுத்துக்கொள்வது இல்லை என தெரிவித்தார்.ரஜினியை பயன்படுத்திக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு, பதில் அளிக்க மறுத்த அவர், ரஜினி கட்சி துவங்க இருப்பது அவரது உரிமை எனக் கூறினார்.

மத்திய அரசின் திட்டதால் அதிகளவு பயன் அடைந்தது தமிழகம் என்றும், பா.ஜ.கவில் இருந்தால் எளிய நிலையில் இருந்தாலும் மிகப்பெரிய பொறுப்பிற்கு வரம் முடியும் என்றார். வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவின் உறுப்பினர், சட்ட பேரவையில் இடம் பெறுவார்கள் இது தான் இலக்கு எனவும் அப்போது கூறினார்.கடந்த 6 மாதமாக சி.ஏ.ஏ குறித்து ஆதரவு பேரணி நடத்தி உள்ளதாகவும், இளைஞர்கள் மோடியை நோக்கி வருகின்றனர் . இளைஞர்களுக்கு கட்சியில் அதிக வாய்ப்பு கொடுக்கப்படும் என்றார். மேலும் தமிழக மக்கள் நலன் சார்ந்த விசயத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் எனவும் தமிழ் மக்கள் நலனுக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவோம் எனவும் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது என்.ராஜா, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Also see...
First published: March 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading