ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உங்கள் தொகுதி: கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

உங்கள் தொகுதி: கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

உங்கள் தொகுதி: கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் இதுவரை 7 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வென்றுள்ளது. அடுத்ததாக அதிமுக 4 முறையும், காங்கிரஸ் 2 முறையும், சுயேச்சைகள் 2 முறையும் வென்றுள்ளன.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நாம் பயன்படுத்தும் தீப்பெட்டிகளை திருப்பி தயாரிப்பு பெயரைப் பார்த்தால் அதில் இடம் பெற்றிருக்கும் பெயர் கோவில்பட்டி. இயந்திரம் மூலம் தீப்பெட்டி தயாரிக்கும் 200 பகுதி நேர ஆலைகள், 10 முழு நேர ஆலைகள் அது சார்ந்த 850 தொழிற்சாலைகள் என சுமார் 2 லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் தொழில் இது. அதில் 90 விழுக்காடு பெண்கள். தீப்பெட்டி மூலமாக மட்டும் ஆண்டுக்கு 13,000  கோடி ரூபாய் வர்த்தகம் நடப்பதால் பொருளாதார அடிப்படையில் தமிழகத்தின் தவிர்க்க முடியாத தொகுதி கோவில்பட்டி.

  கோவில்பட்டிக்கு பெயர் பெற்றுத் தந்த கடலைமிட்டாய் தொழிலில் 150 தயாரிப்பாளர்களும், 10,000 தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். வெளிநாட்டிற்கும் சென்று தமிழரின் சுவை பரப்பும் கடலை மிட்டாய் மூலம் ஆண்டுக்கு 350 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது.

  கரிசல் மண்ணில் பருத்தியும், உளுந்தும், சோளமும், மிளகாயும் விளையும் பூமி.. கோரைப்பாய்க்கு பெயர் பெற்ற கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் 70 நிறுவனங்கள் அந்த தொழிலில் ஈடுபடுகின்றன... வேலையே மூலவராக கொண்ட சொர்ணமலை கதிர்வேல் முருகன் ஆலயம் கோவில்பட்டியின் அடையாளம். தென்னகத்தின் எல்லோரா என அழைக்கப்படும் கழுகுமலை வெட்டுவான் கோயிலும் சமணப் பள்ளியும் இந்த தொகுதியின் வரலாற்று சிறப்பின் சாட்சியங்கள்... ஹாக்கி விளையாட்டில் கோவில்பட்டியின் பெருமையை பறைசாற்றும் 12 பதிவு பெற்ற கிளப்புகள் இருக்கின்றன. இந்திய அணியில் விளையாடிய வீரர்களை உருவாக்கிய ஊர்.

  நாட்டின் முதல் தேர்தல் தொட்டு இருக்கும் இந்த தொகுதி ஆரம்பத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக திகழ்ந்தது. இங்கே ஐந்து முறை வென்ற அக்கட்சியின் அழகர்சாமி தொடர்ந்து 4 முறை வெற்றிக்கொடி பறக்கவிட்டவர்.

  கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிகமாக 7 முறை வென்றுள்ளது. ஆனாலும் கடந்த 3 தேர்தலாக இங்கே அதிமுகவின் ஆதிக்கம்தான் இருக்கிறது. அதிலும் தற்போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருக்கும் கடம்பூர்ராஜூ தொடர்ந்து இருமுறை வென்றுள்ளார்.

  2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ களம் காண வேண்டிய தொகுதி இது... வேட்பு மனு தாக்கலின்போது தனது கட்சியின் விநாயக ரமேஷை மனு தாக்கல் செய்ய வைத்து அதிர்ச்சி கொடுத்தார் வைகோ.

  அந்த தேர்தலில் அப்போது எம்எல்ஏவாக இருந்த கடம்பூர் ராஜூ இரண்டாம் முறையாக வாகை சூடினார். திமுக வேட்பாளர் சுப்பிரமணியனை 428 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சராக ஆன கடம்பூர் ராஜூ, இந்த தொகுதியில் இருந்து முதல்முறையாக அமைச்சரான எம்எல்ஏ என்ற பெருமையையும் பெற்றார்.

  மேலும் படிக்க... 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

  புவிசார் குறியீடு கிடைத்துள்ள கடலைமிட்டாயை சத்துணவு திட்டத்தில் சேர்த்து கொள்முதல் செய்ய வேண்டும்... தீப்பெட்டி தொழிலுக்கான மூலப்பொருட்களை சிட்கோ மூலம் இறக்குமதி செய்து கொடுக்க வேண்டும் என பல கோரிக்கைகள் இந்த தொகுதியில் வரிசை கட்டி நிற்கின்றன. மக்கள் தேர்தலை வரவேற்கத் தயாராகிவிட்டார்கள். அமைச்சர் கடம்பூர் ராஜூ இங்கே ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்....

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Kovilpatti, Minister kadambur raju, TN Assembly Election 2021