• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Sasikala | சசிகலாவுக்கு எதிராக மாவட்ட கழகங்களில் தீர்மானம்- முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

Sasikala | சசிகலாவுக்கு எதிராக மாவட்ட கழகங்களில் தீர்மானம்- முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

சசிகலா

சசிகலா

சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க மாவட்டக் கழகங்களில் நாளை தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சொந்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த சசிகலா கடந்த ஜனவரி மாதம் விடுதலையானார். சசிகலாவின் வருகை அதிமுகவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பேச்சுகள் எழுந்தது. அதிமுகவில் இருந்து பிரிந்து தினகரன் பின்னால் அமமுகவுக்கு சென்றவர்கள் மீண்டும் தாய் கழகத்தில் இணைந்துவிடலாம் என நினைத்தனர். ஆனால், அ.தி.மு.கவில் சசிகலாவை இணைப்பதற்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் உறுதியாக மறுத்துவிட்டனர். அதனையடுத்து யாரும் எதிர்பாராத வகையில், அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டார்.

    அதனையடுத்து, அ.தி.மு.க தன்னிச்சையாக தேர்தலைச் சந்தித்தது. அதில், அ.தி.மு.க தனிப்பட்டு 66 தொகுதிகளிலும், கூட்டணி 75 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தி.மு.க ஆட்சி வந்து ஒரு மாதம் கடந்துள்ளநிலையில், அ.தி.மு.க தொண்டர்களிடம் சசிகலா தொடர்ந்து பேசும் ஆடியோக்கள் வெளிவருகின்றன. தொண்டர்களிடம் பேசும் சசிகலா, கண்டிப்பாக கட்சிக்கு வருவேன். மீண்டும் கட்சியை தலைமையேற்று நடத்துவேன்’ என்று பேசிவருகிறார். இதுவரையில், 40-க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் வெளிவந்துள்ளன.

    அதிமுக நிர்வாகிகளிடம் சசிகலா பேசும் ஆடியோக்கள் வெளியாகி அதிமுகவில் புதிய புயலை கிளப்பியது. அதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இரு தினங்களுக்கு முன்னர் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சசிகலாவுடன் பேசிய 15-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

    இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘சசிகலா ஆடியோ விவகாரம் தொடர்பாக கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தெளிவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானத்தை வலியுறுத்தி நாளைய அ.தி.மு.க மாவட்ட கழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அ.தி.மு.க தலைமைக்கு அனுப்பப்பட உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தீர்மானத்தில் இடம்பெறக்கூடிய அம்சங்கள் குறித்து அ.தி.மு.க தலைமைக்கழகம் இன்னும் அனுப்பவில்லை. அனுப்பிய உடன் அதனை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும். அ.தி.மு.க மீது எந்த ஜாதி சாயத்தினையும் யாராலும் பூச முடியாது. அந்த மாதிரி குற்றச்சாட்டு ஒருநாள் செய்தியாகும். தவிர மக்கள் யாரும் நம்ப மாட்டார்கள்’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: