ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Tamil Nadu Lockdown : தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா?

Tamil Nadu Lockdown : தமிழகத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் கடந்த 10-ம் தேதி முதல் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாளை மறுதினம் அதிகாலையுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், தினசரி தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. சென்னை மட்டுமன்றி, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

  இந்நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் இன்று காலை 10 மணிக்கு முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து, 13 கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் குழுவுடன் ஆலோசனை நடைபெறுகிறது. இதில், தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிப்பது மற்றும் நீட்டிப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

  இதனிடையே, 5 மாவட்டங்களில் ஆய்வை முடித்துவிட்டு, திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியதாகவும், இதுதொடர்பாக இன்றைய ஆலோசனையில் முடிவுசெய்யப்படும் என்றும் கூறினார்.

  அடுத்த மாதம் 3-ம் தேதிக்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கு அடுத்த தவணையாக 2000 ரூபாய் வழங்கப்பட்டுவிடும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

  தேர்தலில் வெற்றிபெற்றது முதலே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும், மக்களின் உயிரைக் காக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் அரசு இயங்கி வருவதாகவும், கொரோனா இல்லை என்று கூறப்படும் நாள்தான், தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் நாளாக இருக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

  தமிழகத்துக்கு தடுப்பூசியை மட்டும் மத்திய அரசு போதிய அளவில் வழங்கவில்லை என்றும், மற்ற தேவைகளை நிறைவேற்றி வருவதாகவும் முதலமைச்சர் கூறினார். தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக கூறினார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், பிரதமரை உரிய நேரத்தில் சந்தித்து தமிழகத்திற்கான தேவைகள் குறித்து கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Lockdown, MK Stalin