மதுரையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பா? அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

மதுரையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பா? அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்
அமைச்சர் ஆர்.பி உதயகுமார்(கோப்பு படம்)
  • Share this:
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மதுரையில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிடுவார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வடபழனியில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், ‘மதுரை மாவட்டத்தில் முதல்வர் உத்தரவிற்கிணங்க கொரோனா தடுப்பு விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சிறப்பு மருத்துவ முகாம், நடமாடும் காய்ச்சல் பரிசோதனை முகாம் இவைகளெல்லாம் தீவிரப்படுத்தப்பட்டு அதற்கு முதல்வர் அறிவுரைப்படி ஜூலை 4ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.


தற்போது வரை பரிசோதனை விரிவுபடுத்தப்பட்டு ஆரம்ப நிலையிலேயே நோய் கண்டறியப்பட்டு 1,400 படுக்கைகள் அரசு ராஜாஜி மருத்துவமனையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மூச்சுத்திணறல் நிலையில் உள்ள நோயாளிகளுக்கு ஆக்சிசன் வசதியோடு, படுக்கை வசதிகள் தயார் செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தவிர அரசு மருத்துவமனைகளில் 450 படுகைகள் தயாராக உள்ளன. தனியார் மருத்துவமனையில் 800 முதல் 900 வரை படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. தீவிர சிகிச்சைக்காக மதுரையில் 21 சிகிச்சை மையங்கள் முதல்வர் உத்தரவுப்படி செயல்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் இதில் அதிக கவனம் செலுத்தி கிட்டத்தட்ட 2,100 படுகைகளை தயார் நிலையில் உள்ளது. வடபழனியில் உள்ள தகவல் தொழில்நுட்பத்தின் சிறப்பு மண்டலத்தில் மூன்று அடுக்கு கட்டிடம் உள்ளது.

பயன்பாட்டில் இல்லாத கட்டடத்தை முதல்வரிடம் தெரிவித்து தற்போது 1,100 படுக்கைகள் தயார் படுத்தப்பட்டு கொரானா சிகிச்சை மையமாக செயல்பட உள்ளது. மூன்று தலங்களிலும் அடிப்படை வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகள் தயாராகி வருகின்றது.இதற்கென்று தனியாக மண்டல அதிகாரி நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக மதுரையில் நோய்தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைவாக வருவது ஆறுதல் அளிக்கிறது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை கிராமப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மாநகராட்சியில் காய்ச்சல் முகம் ஏற்படுத்தியது போல கிராமப்புறங்களிலும் காய்ச்சல் முகாமும் நடத்தப்பட்டது.

இந்த முகாம் நல்ல பலனை கொடுத்துள்ளது. மக்கள் அளித்த ஒத்துழைப்பும் மிக நல்ல பலனை கொடுத்துள்ளது. வரும் காலங்களிலும் மக்களின் ஒத்துழைப்பால் கொரோனா குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மதுரையைப் பொறுத்தவரை மக்கள் கொடுக்கின்ற ஒத்துழைப்பு நல்ல பலனை கொடுப்பதால் கொரோனா எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தற்போது ஆறாவது முறையாக பொது ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தீவிர காய்ச்சல் சிகிச்சை முகாம் பலனை தருவதால் ஊரடங்கைத் தொடரலாம் என்று மாவட்ட நிர்வாகம், மருத்துவமனை அதிகாரிகள் மூலம் ஆலோசனை மேற்கொண்டு முதல்வரிடம் விவரங்களைக் கொடுத்துள்ளோம். மதுரையின் நிலவரம் குறித்து முதல்வர் விரிவான ஆலோசனை மேற்கொண்டு மதுரையில் ஊரடங்கு நீடிப்பதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்’ என்று தெரிவித்தார்.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading