9 மாவட்டங்களில் செப்டம்பர் இறுதியில் உள்ளாட்சி தேர்தல்?

மாநில தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

 • Share this:
  செப்டம்பர் மாத இறுதியில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

  தமிழகத்தில் சில மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டதால், உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறாமல் உள்ளது.

  இந்த மாவட்டங்களுக்கு தேர்தலை நடத்த வேண்டும் என்று ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் செப்டம்பர், மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் விட்டது. இந்நிலையில், மேற்கண்ட 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தமிழக தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

  அதன்படி, மாவட்ட வாரியாக தேர்தல் ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்து வருகிறார். 9 மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

  தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும் நிலையில், தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கான பயிற்சிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான பயிற்சிகள் போன்றவை நடத்தப்பட உள்ளன.

  Must Read : கிராமங்களின் தெருக்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் - விசிக எம்.எல்.ஏ சிந்தனை செல்வன்

  இந்நிலையில், 9 மாவட்டங்களுக்கும் செப்டம்பர் மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்குவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆயத்தம் ஆகி வருகின்றன. போட்டி கடுமையாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
  Published by:Suresh V
  First published: