கட்சியின் பெயரை பதிவு செய்கிறார் கமல்?

news18
Updated: February 13, 2018, 2:09 PM IST
கட்சியின் பெயரை பதிவு செய்கிறார் கமல்?
கமல்ஹாசன்
news18
Updated: February 13, 2018, 2:09 PM ISTநாளை மறுநாள் தேர்தல் ஆணையத்தில் கமல்ஹாசன் தனது கட்சியின் பெயரை  பதிவு செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கட்சியை பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையத்திடம் நாளை மறுநாள் கமல் நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் கமல்ஹாசன் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசிவருகிறார். இதற்கிடையே  தனது கட்சியின் பெயரை நாளை மறு நாள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக  பிப்ரவரி 21-ம் தேதி அப்துல் கலாம் பிறந்த நாள் அன்று  தனது அரசியல் பயணத்தை தொடங்குவதாக கமல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசியல் தொடர்பாக தொடர்ந்து கருத்துகளை கூறி வரும் கமல்ஹாசன் அமெரிக்காவாழ் தமிழர்களிடையே பேசுகையில், ``நான் தொடங்கும் கட்சி 3 தலைமுறைக்காவது பயன்படும் சமுதாயக் கருவியாக இருக்க வேண்டும் என ஆசைபடுகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ``வெறும் கலைஞனாக மட்டுமே இருப்பது எனக்கு போதவில்லை. கலைஞனாக மட்டுமே இருந்துவிட்டு இந்த மண்ணைவிட்டு பிரியமாட்டேன். நான் தொடங்க உள்ள கட்சியில் பணியாற்ற யார் வேண்டுமானாலும் வரலாம். அதற்காகத்தான் `மையம்’ என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளேன்.  அதில் உங்கள் அனைவரது பங்கும் இருக்க வேண்டும். நம் எல்லோருக்குமே கடமை இருக்கிறது. இது நீண்ட பயணமாக இருக்க வேண்டும். அது தமிழர்களுக்கான பயனாக இருக்க வேண்டும். நான் என் தனிப்பட்ட வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு கடமை செய்ய வந்திருப்பதுபோல, ஒவ்வொரு தமிழரும் நாட்டுக்காக கடமை ஆற்ற தயாராக வேண்டும்’’ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Loading...

First published: February 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...