ஜேபி நட்டா மு.க.அழகிரியை சந்திப்பாரா? எல்.முருகனின் பதில்

ஜெ.பி. நட்டா

ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த காலத்தை காட்டிலும், தற்போது பாஜக ஆட்சிகாலத்தில் சிறப்பான முறையில் நிதி நிர்வாகம் செயல்படுகிறது.

  • Share this:
    தமிழகம் வரும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மு.க.அழகிரியை சந்தித்துப் பேசுவாரா என்பது உள்ளிட்ட, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு மதுரை விமானநிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பதிலளித்துப் பேசினார்.

    ஜேபி நட்டா தமிழகம் வருவது, தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு புதிய உத்வேகம் அளிக்கும் எனவும், அவரது வருகைக்காக மதுரையில் சிறப்பான முறையில் வரவேற்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    ஜேபி நட்டாவின் வருகை தங்களது அமைப்பு குறித்தான கூட்டத்தில் பங்கேற்பதுக்காக மட்டுமே, அரசியல் காரணம் இல்லை என்று எல்.முருகன் கூறினார்.

    கடந்த ஏழு வருடமாக இந்தியாவின் நிதிநிலை அதல பாதாளத்திற்குத் தள்ளியதுதான் பாஜகவின் சாதனை என ப. சிதம்பரம் கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முருகன், சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த காலத்தை காட்டிலும், தற்போது பாஜக ஆட்சிகாலத்தில் சிறப்பான முறையில் நிதி நிர்வாகம் செயல்படுகிறது என்றார்.

    வேளாண் சட்டங்களை முழுமையாக படித்து விட்டால் நாடே பற்றி எரியும் என ராகுல் காந்தி பேசியது குறித்து கேள்விக்கு, ராகுல் காந்தி வேளாண் சட்டத்தை முழுமையாக படிக்காததையே இது காட்டுவதாகவும், அதனை முழுமையாக படித்தவர்கள் வேளாண் சட்டத்தினை ஆதரிப்பதாகவும், அதனை படிக்காதவர்களே ஏற்க மறுப்பதாகவும் கூறினார்.

    தமிழகத்திற்கு வருகை தரும் ஜேபி நட்டா மு.க.அழகிரியை சந்திக்க வாய்ப்பிருப்பதாக வரும் தகவல் குறித்த கேள்விக்கு, ஜேபி நட்டா தமிழகத்திற்கு வருகை புரிவது தங்கள் அமைப்பு சார்பாக நடைபெறும் கூட்டம் மற்றும் ஆலோசனைகளில் பங்கேற்பதற்கு மட்டுமே, எந்த அரசியல் நோக்கம் எதுவும் இல்லை என்றார்.

    மேலும் படிக்க... சசிகலாவை வரவேற்று திருச்சியில் அதிமுக சார்பில் போஸ்டர்கள்!

    சட்டமன்ற தேர்தலில் தேமுதிக 41 சீட்டு கோரிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த எல்.முருகன், கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை முடிந்த பிறகே அதனை பற்றி கூற முடியம் என்று கூறினார்.
    Published by:Suresh V
    First published: