• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஜெய்பீம் படத்திற்கு அரசு விருது வழங்கப்படுமா? அமைச்சர் பதில்

ஜெய்பீம் படத்திற்கு அரசு விருது வழங்கப்படுமா? அமைச்சர் பதில்

ஜெய்பீம் படத்திற்கு மத்திய மாநில அரசுகள் விருது வழங்கி அங்கீகாரம் வழங்கக் கூடாது என்று வன்னியர் சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    ஜெய்பீம் படத்திற்கு அரசு விருது வழங்கி அங்கீகாரம் அளிக்கக் கூடாது என்று வன்னியர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அது தொடர்பான கேள்விக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதன் பதில் அளித்துள்ளார்.

    சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஒரு காட்சியில், அக்னிச் சட்டி படத்துடன் கூடிய காலண்டர் இடம்பெற்றிருந்தது. அது வன்னியர் சமூகத்தை அவமதிப்பது போல் உள்ளதாக கூறி, பாமக, வன்னியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதையடுத்து அந்தக் காட்சி நீக்கப்பட்டது.

    மேலும் வன்னியர்களின் மனதை சூர்யா புண்படுத்தி விட்டதாக கூறி, நஷ்ட ஈடாக ரூ. 5 கோடியை ஜெய்பீம் தயாரிப்பு நிர்வாகம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு சூர்யா தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. கடைசியாக சூர்யா விடுத்திருந்த அறிக்கையில், எளிய மக்களின் நலன் மீது அக்கறை இல்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும் அவர்கள் ஒரே மாதியாகத்தான் நடந்து கொல்கிறார்கள். இதில் சாதி, இன், மதம், மொழி, பேதம் இல்லை. சகமனிதனின் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பை தருகிறேன். சமத்துவம், சகோதரத்துவம் பெறுக. அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம். புரிதலுக்கு நன்றி. என்று கூறியிருந்தார்.

    இதன் தொடர்ச்சியாக ஜெய்பீம் படத்திற்கு மத்திய மாநில அரசுகள் விருது வழங்கி அங்கீகாரம் வழங்கக் கூடாது என்று வன்னியர் சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் வெள்ளக்கோயில் சாமிநாதனிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'ஜெய்பீம் பட பிரச்னையை சுமூகமாக பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். விருது வழங்கக் கூடாது என்று வன்னியர் சங்கம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதில் நியாயம் இருந்தால் பரிசீலிப்போம். அதேநேரம், திட்டமிட்டு குற்றம் சுமத்தப்படுவதை ஏற்கமுடியாது' என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Musthak
    First published: