Home /News /tamil-nadu /

பள்ளி சீருடையில் மதுவாங்கும் மாணவர்கள்.. இப்படியே சென்றால் எல்லா டாஸ்மாக் கடையும் மூட நேரிடும் - நீதிமன்றம் எச்சரிக்கை!

பள்ளி சீருடையில் மதுவாங்கும் மாணவர்கள்.. இப்படியே சென்றால் எல்லா டாஸ்மாக் கடையும் மூட நேரிடும் - நீதிமன்றம் எச்சரிக்கை!

கோப்பு படம்

கோப்பு படம்

மனுதாரர் தனது மனுவில், பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்து, டாஸ்மாக் மதுகடைகளில் மது வாங்கும் புகைபடங்களை ஆதாரத்துடன் இணைத்து உள்ளார் என தெரிவித்த நீதிபதிகள் “நாம் எங்கே செல்கிறோம்?” என வேதனை தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
    டாஸ்மாக் கடைகளில் பள்ளி மாணவர்கள் சீருடையுடன் மதுபானம் வாங்குகின்றனர். இதே நிலை நீடித்தால், டாஸ்மாக் கடைகளை ஒட்டுமொத்தமாக மூட நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.

    திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டில் ரூ. 31,244 கோடி மதுபானம் விற்கப்பட்டது. பண்டிகை காலங்களில் இலக்கு நிர்ணயம் செய்து மது விற்பனையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் மது அருந்தும் பழக்கம் 36 சதவீதம் ஆகவும், தமிழகத்தில் மது அருந்தும் பழக்கம் 46.7 சதவீதமாகவும் உள்ளது. மது அருந்தும் பழக்கத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

    மது பழக்கத்தால் மனமுறிவு, நிம்மதியின்மை, உடல் நலக்குறைவு உட்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 வரை செயல்படுகின்றன. இரவில் போதையில் வாகனத்தில் செல்வோர்களால் விபத்துகளும், உயிரிழப்புகளும் நடைபெறுகின்றன. மது விற்பனைக்கு எதிராகவும், மதுகடைகளை மூடவும் வலியுறுத்தி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

    இருப்பினும் மனு விற்பனை அதிகரித்து வருகிறது. எனவே 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதித்து உத்தரவிட வேண்டும். மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்த அறிவிப்புகளை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் வைக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலைப்பட்டியல் வைக்கவும், மது விற்பனைக்கு ரசீது வழங்கவும், கூடுதல் விற்பனைக்கு மது விற்றால் புகார் அளிக்க உயர் அதிகாரிகளின் தொடர்பு எண் மற்றும் விபரங்களை டாஸ்மாக் கடைகளில் எழுதி வைக்க வேண்டும்.

    மது தாயாரிக்க பயண்படுத்திய பொருட்கள், சதவீதம் உள்ளிட்ட விவரங்களை, டாஸ்மாக் மது பாட்டிலில்  ஒட்ட வேண்டும்.  கடைகளில்  விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் 8. மணி வரை என மாற்றியமைக்கவும் உத்தரவிட வேண்டும்" என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்.

    இதையும் வாசிக்க: மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

    இந்த மனு உயர்நீதிமன்றம் மதுரை கிளைகயில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் தனது மனுவில், பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்து, டாஸ்மாக் மதுகடைகளில் மது வாங்கும் புகைபடங்களை ஆதாரத்துடன் இணைத்து உள்ளார் என தெரிவித்த நீதிபதிகள் “நாம் எங்கே செல்கிறோம்?” என வேதனை தெரிவித்தனர். இதே நிலை நீடித்தால் மாவட்ட ஆட்சியர்கள், பள்ளி கல்வி துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக நேரிடும் எனவும் ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் கடைகளை மூட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

    மனுதாரர், உன்னதமான நோக்கத்துடன் பொது நல மனு தாக்கல் செய்து உள்ளார். நீதிமன்றம் அவரை பாராட்டுகிறது என  தெரிவித்தனர். மேலும், மனுதாரர்  பொது நல மனு தொடர்பாக  கூடுதல் ஆவணங்கள், தகவல்களுடன் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசும்  இது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கு  விசாரணையை 2 வாரங்கள் ஒத்தி வைத்தனர்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Alcohol consumption, Madurai High Court, Tasmac

    அடுத்த செய்தி