ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் முடிவுக்கு வருகிறது

ஜெயலலிதா

வரும் 24ம் தேதியுடன் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 10வது முறையாக வழங்கப்பட்ட 6 மாத கால அவகாசம் முடிவடைகிறது. இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் அரசுஅளித்த கால அவகாசம் நிறைவு பெறுவது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு வரும் 24ம் தேதியுடன் அவகாசம் முடிவடையும் நிலையில், மேலும் கூடுதல் அவகசாம் வழங்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி  ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.  இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள், செவிலியர்கள், போயஸ்கார்டன் ஊழியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என இதுவரை 154 பேரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விசாரணை இறுதிகட்டத்தை அடைந்த நிலையில், 2019ல் இந்த வழக்கில் உரிய மருத்துவ குழுவை கொண்டு விசாரணை மேற்கொள்ளவில்லை என்று அப்பல்லோ நிர்வாகம் தரப்பில்  உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதையடுத்து, இந்த ஆணைத்தின் விசாரணைக்கு இடைக்கால தடையை நீதிமன்றம் விதித்தது.

இதையும் படிங்க: குழந்தையை கடத்த வந்ததாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கிய பொதுமக்கள்!
இந்த சூழலில், வரும் 24ம் தேதியுடன் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 10வது முறையாக வழங்கப்பட்ட 6 மாத கால அவகாசம் முடிவடைகிறது. இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் அரசுஅளித்த கால அவகாசம் நிறைவு பெறுவது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை விரைந்து நடத்தி ஆறுமுகசாமி ஆணையத்தின் மீதான தடையை அரசு  நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: வேட்பு மனுவில் வரி பாக்கி தொடர்பான தகவலை மறைத்ததாக நத்தன் விசுவநாதன் மீது புகார்!


மேலும் கூடுதல் கால அவகாசம் கொடுக்கப்படுமா அல்லது ஆணையத்திடம் இருந்து இடைக்கால  அறிக்கையை பெறுவதற்கான முயற்சியை அரசு மேற்கொள்ளுமா என்று எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.  ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மம் திமுக ஆட்சிக்கு வந்தால்தான்  விலகும் என தேர்தல் பிரசாரத்தின்போது மு.க.ஸ்டாலின் கூறி வந்தநிலையில்,  தற்போது ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால அவகாசம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Published by:Murugesh M
First published: