Home /News /tamil-nadu /

வரும் ஞாயிற்றுக் கிழமையும் முழுஊரடங்கு? விரைவில் அறிவிப்பு வெளியாகும்

வரும் ஞாயிற்றுக் கிழமையும் முழுஊரடங்கு? விரைவில் அறிவிப்பு வெளியாகும்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Sunday Full Lockdown | பொங்கலுக்கு பின் தமிழகத்தில் தொடர்ச்சியான முழுஊரடங்கு இருக்காது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவிருந்து இருந்தார்.

    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கடந்த 2 வார ஞாயிற்று கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் வரும் ஞாயிற்று கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

    ஒமைக்ரான் தொற்று காரணமாக நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரேனாாவல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை எட்டியுள்ளது. இதையடுத்து பல மாநிலங்களில் கொரோனா பரவலை தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தை பொறுத்தவரை 24 மணி நேரத்தில் கொரேனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 26,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் வரும் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 2 வாரங்களாக ஞாயிற்றுக் கிழமைகளில் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொங்கலை முன்னிட்டு மக்கள் அதிகளவில் கூடாமல் இருக்க ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

    Also Read : கே.பி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து குவித்துள்ளதாக வழக்குப்பதிவு

    இந்நிலையில் வரும் ஞாயிற்று கிழமையும் முழுஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று பலரது கேள்வியாக உள்ளது. பொங்கலுக்கு பின் தமிழகத்தில் தொடர்ச்சியான முழுஊரடங்கு இருக்காது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவிருந்து இருந்தார். இதனால் வரும் வாரங்களில் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் கொரோனா பரவல் இன்னமும் கட்டுக்கடங்காமல் இருப்பதால், வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.ஞாயிறு அன்று முழு ஊரடங்கு விதிப்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் தமிழக அரசு வழங்கவில்லை என்றாலும் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Corona, Lockdown, MK Stalin

    அடுத்த செய்தி