• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நீட் ஆய்வு குழுவுக்கு எதிராக பாஜக உச்ச நீதிமன்றத்தை நாடினால் திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்வோம்: வில்சன்!

நீட் ஆய்வு குழுவுக்கு எதிராக பாஜக உச்ச நீதிமன்றத்தை நாடினால் திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்வோம்: வில்சன்!

வழக்கறிஞர் வில்சன்

வழக்கறிஞர் வில்சன்

இந்த குழு உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது கிடையாது என்றும்  நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராயவே குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட வில்சன்,  இது போன்ற குழு அமைக்க கூடாது என உச்சநீதிமன்றம் கூறவில்லை எனவும் தெரிவித்தார்.

  • Share this:
நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவினருக்கு எதிராக பாஜக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் திமுக தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்படும் என வழக்கறிஞர் வில்சன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்தது. இந்த குழு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை  சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இந்நிலையில்,  நாடாளுமன்ற உறுப்பினரும் திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞருமான வில்சன் சென்னை நுங்கம்பாக்கத்தில்  செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது பேசிய அவர், ‘நீட் தேர்வு பாதிப்பு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்த பாஜகவின் கரு.நாகராஜன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கு குழு அமைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது’ என்று தெரிவித்தார்.

இந்த குழு உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரானது கிடையாது என்றும்  நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராயவே குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட அவர்,  இது போன்ற குழு அமைக்க கூடாது என உச்சநீதிமன்றம் கூறவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்த தீர்ப்பு தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி என கூறிய வில்சன், 70 வருடமாக நீட் தேர்வை வைத்து மருத்துவர்கள் உருவாகவில்லை. கீழ் மட்டத்தில் உள்ள மாணவர்கள் மருத்துவம் படிக்க கூடாது என்ற எண்ணம் இருப்பதால்தான் இதுபோன்ற வழக்குகள் வருகிறது. நீட் குறித்து எந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் இல்லை அதனால், பாஜக உச்ச நீதிமன்றம் செல்லாது என்று கூற முடியாது. பாஜக சென்றால் திமுக தரப்பில் கேவியேட் மனு தாக்கல் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: