ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இன்று சட்டமன்றக் கூட்டம்... ஓ.பன்னீர்செல்வம் அருகே அமர்வாரா எடப்பாடி பழனிசாமி?

இன்று சட்டமன்றக் கூட்டம்... ஓ.பன்னீர்செல்வம் அருகே அமர்வாரா எடப்பாடி பழனிசாமி?

ஓபிஎஸ் - இபிஎஸ்

ஓபிஎஸ் - இபிஎஸ்

ஆளுநர் உரையுடன் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் ஓபிஎஸ் அருகே இபிஎஸ் அமர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சட்டமன்றத்தில் ஓபிஎஸ் வகித்து வந்த எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் உதயகுமாரை நியமிக்குமாறு சபாநாயகரிடம்  இபிஎஸ் தரப்பு கடிதம் அளித்தது. ஆனால், இதுவரை ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பில் இருந்து நீக்கப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் இதுதொடர்பாக சபாநாயகர் இதுவரை முடிவு எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் வழக்கம்போல எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கான இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தார். இதனால் எதிக்கட்சி துணைத் தலைவராக உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கம் எழுப்பினர். ஆனால், சட்டமன்ற விதிகளைக் கூறி சபாநாயகர் மறுத்துவிட்டார். இதனைக் கண்டித்து  எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில்தான் ஆளுநர் உரையுடன் இன்று சட்டமன்றம் மீண்டும் கூடுகிறது. கூட்டம் முடிந்த பிறகு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் அதிமுக எம்எல்ஏ-க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது.

உதயகுமாரை எதிர்க்கட்சி துணைத் தலைவராக இன்னும் சபாநாயகர் அப்பாவு அங்கீகரிக்காத நிலையில், வழக்கம்போல எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு அருகேயுள்ள தனது இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வரும் நிலையில், அருகருகே அமர்வார்களா  அல்லது ஓபிஎஸ் அருகே அமர்வதை இபிஎஸ் தவிர்ப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

First published:

Tags: Edappadi Palanisami, O Panneerselvam, TN Assembly