• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆடி மாதம் வருது.. கோவில்களில் திருவிழா நடத்த அனுமதிக்கப்படுமா...?

ஆடி மாதம் வருது.. கோவில்களில் திருவிழா நடத்த அனுமதிக்கப்படுமா...?

கோவிலில் பக்தர்கள்.. 
( David Bokuchava / Shutterstock.com)

கோவிலில் பக்தர்கள்.. ( David Bokuchava / Shutterstock.com)

ஆடி மாதம் 18 ஆம் தேதி, ஆண்டு தோறும் காவிரியில் புனித நீராடி, எள், வெல்லம் கலந்த பச்சரிசி, பழங்கள் முதலிய விளைபொருட்களை படையலிட்டு வழிபட்டு வருவது தொன்று தொட்டு நடந்து வருகிறது.

  • Share this:
    தமிழ்நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், ஜூலை 19ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைகிறது. இந்நிலையில் கூடுதல் தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் இன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் நிலையில், ஆடி திருவிழா நடத்த அனுமதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், இந்த ஆண்டு காவிரி ஆற்றுப் படித்துறைக்கு ஆடி 18ஆம் பெருக்கு விழாவிற்கு அனுமதி மற்றும் பல்வேறு ஆடித் திருவிழாக்கள் கொண்டாட பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்விஎழுந்துள்ளது. ஆன்மிக வழிபாடு மற்றும் பண்டிகைகளுக்கு உரிய தமிழ் மாதங்களில் ஆடி மாதத்திற்கு தனி இடம் உண்டு. இந்நிலையில், 17ஆம் தேதி நாளை (சனிக்கிழமை) ஆடி மாதம் தொடங்குகிறது.

    strong>Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், ஆடி மாதம் 18 ஆம் தேதி, ஆண்டு தோறும் காவிரியில் புனித நீராடி, எள், வெல்லம் கலந்த பச்சரிசி, பழங்கள் முதலிய விளைபொருட்களை படையலிட்டு வழிபட்டு வருவது தொன்று தொட்டு நடந்து வருகிறது. அத்துடன், ஆடிப்பெருக்கு அன்று புதுமணத் தம்பதிகளும், கன்னிப் பெண்களும், குழந்தைகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டு இன்புறுவர்.

    அதேபோல, ஆடி மாதத்தில் புனித நீராடி முன்னோருக்கு நன்றிக் கடனாம் பித்ருக் கடன் செலுத்தும் ஆடி அமாவாசையும், திருவையாறில் அப்பர் பெருமானுக்கு சிவபெருமான் கயிலாயக் காட்சி தந்தப் பெருவிழாவும் (ஆகஸ்ட்டு மாதம் 8ஆம் தேதி) நடக்கிறது. மேலும், காவிரி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள தஞ்சை மாவட்டம் திருவையாறு மற்றும் சுற்று வட்டார கிராம மக்களால் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்பட்டு வரும் ஆடி மாத விழாக்கள் கடந்த ஆண்டு கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அரசால் தடை செய்யப்பட்டு காவிரி ஆற்றில் புனித நீராட முடியாமலும், விழாக் கொண்டாட முடியாமலும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

    Must Read : மேகதாது அணை விவகாரம்... இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கிறது தமிழக அனைத்துக் கட்சிக் குழு

    இந்நிலையில், இந்த ஆண்டும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால், ஆடி 18ஆம் பெருக்கு விழா கொண்டாட காவிரி ஆற்றுப் படித்துறைக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற கேள்விஎழுந்துள்ளது. இந்த ஆண்டு ஆடி 18 ஆடிப்பெருக்கு விழா நடத்த காவிரி ஆற்றின் கரைகளுக்கு மக்கள் செல்வதற்கு அரசாங்கம் தடை விதிக்க வேண்டாம் என்றும், விழா நடத்த வசதி செய்து தருமாறும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Read More : ஊரடங்கில் என்னென்ன மாற்றங்கள்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

    இந்நிலையில், இன்று முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பான ஆலோகனைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு விரைவில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: