தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுக தலைமை பரிசீலிக்கும் - கே.பி. முனுசாமி

தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் அதிமுக தலைமை பரிசீலிக்கும் - கே.பி. முனுசாமி

கே.பி. முனுசாமி

பொதுச்செயலாளர் என்பது ஜெயலலிதா மட்டும்தான். மற்றவர்கள் அவர்களது சுயநலத்திற்காக கருத்துக்களை கூறுக்கின்றனர் அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது...

  • Share this:
    டிடிவி தினகரன் தனது தவறை ஒப்புக்கொண்டு, மீண்டும் அதிமுகவில் இணைய மன்னிப்பு கடிதம் வழங்கினால் தலைமை அந்த கடிதத்தின் மீது பரிசீலனை செய்யும். அப்படி பரிசீலனை செய்து அவர் அதிமுக கட்சியில் சேர தகுதியில்லாத நபர் என கருதினால் அவரின் பரிசீலனை கடிதம் குப்பை தொட்டிக்கு செல்லும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி பிரத்தியேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கடந்த 27ஆம் தேதி சசிகலா விடுதலை ஆனார். பின்னர் கொரோனா தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா, நேற்ற மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி வருகிறார். இது சம்பந்தமாக அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி  கூறுகையில், கட்சியில் இல்லாத சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தி இருப்பது கண்டனத்திற்குரியது என்றார்.

    அதிமுகவில் நிரந்தர பொதுசெயலாளர் என்பது ஜெயலலிதா மட்டும் என பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டு, சட்டதிட்டங்கள் மாற்றப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற அமைப்பை உருவாக்கி செயற்க்குழு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது. ஆகையால், பொதுச்செயலாளர் என்பது ஜெயலலிதா மட்டும்தான் மற்றவர்கள் அவர்களது சுயநலத்திற்காக இது போன்ற கருத்துக்களை கூறுக்கின்றனர் அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என தெரிவித்தார்.

    சசிகலாவை ஏன் கட்சியில் இருந்து நீக்கவில்லை என்கிற கேள்விக்கு பதிலளித்த கேபி முனுசாமி, அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, உறுப்பினர்கள் புதுப்பித்தல் நடந்து அதில் சசிகலா தன்னை புதுப்பித்து உறுப்பினராக இணைத்துக் கொள்ளவில்லை. அப்படி கட்சியில் இல்லாத சசிகலாவை எப்படி நீக்க முடியும் என்று விளக்கம் அளித்தார்.

    மேலும் படிக்க... சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தி தமிழகம் வந்தால் அவர் மீது வழக்கு தொடுக்கப்படும்: அமைச்சர் சிவி.சண்முகம்

    அதிமுக - அமுமுக இணைக்கபடுமா என்கிற கேள்விக்கு, ‘அதற்கு டிடிவி தினகரன் தனிப்பட்ட ஒருவர் அரசியல் செய்வதற்காக துவங்கப்பட்ட கட்சி, அப்படி பட்ட ஒரு கட்சியுடன் இணைவதற்கு வாய்ப்பு இல்லை. வேண்டும் என்றால், டிடிவி தினகரன் அதிமுகவுக்கு எதிராக செய்த தவறுகளை ஓப்புக்கொண்டு, மன்னிப்பு கடிதம் கொடுத்து, தன்னை அதிமுகவில் இணைக்ககோரினால் அதற்கு அதிமுக தலைமை அக்கடிதம் தொடர்பாக பரிசீலனை செய்யும்.

    மேலும் படிக்க.... ஜெயலலிதா பயன்படுத்திய காரில் பயணம்... ஆரம்பமே அதிரடி கொடுத்த சசிகலா

    அப்படி பரிசீலனையின் அடிப்படையில் அவரை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால் ஏற்றுக்கொள்ளலாம் இல்லை அவர் கட்சியில் சேர்வதற்க்கே தகுதியில்லாத நபர் என்றால் அவரின் மன்னிப்பு கடிதமே குப்பைத்தொடிக்கு சென்று விடும் எனவும் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
    Published by:Suresh V
    First published:

    சிறந்த கதைகள்