திரையரங்குகளை திறப்பது குறித்து நல்ல முடிவு வரும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திரையரங்கு | கடம்பூர்ராஜூ

நாளை மறுதினம் திரைதுறையினருடன் சென்று முதல்வரை சந்திக்கிறோம். அந்த நேரத்தில் விரைவில் திரையரங்குகளை திறப்பது குறித்து நல்ல முடிவு வரும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவந்தாலும், படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டுவருகின்றன. ஏற்கெனவே மாவட்டங்களுக்குள் பொதுப்போக்குவரத்து செயல்பாடு தொடங்கிவிட்ட நிலையில், தற்போது 7-ம் தேதி முதல் மாவட்டம்விட்டு மாவட்டம் பேருந்து, ரயில் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. இருப்பினும், திரையங்கங்கள் திறப்பதற்கு தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீடித்துவருகிறது.

  இந்தநிலையில், திரையரங்குகளைத் திறக்க அனுமதிக்கவேண்டும் என்று திரைத்துறையினர் தொடர்ந்து கோரிக்கைவைத்துவருகின்றனர். இந்தநிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘நாளை மறுதினம் பெச்சி சங்க தலைவர் ஆா்.கே.செல்வமணி, திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா ஆகியோர் முதல்வரை சந்தித்து கொரோனா காலத்தில் இந்தியாவிலே முதலாவதாக படப்பிடிப்பிற்கு அனுமதியளித்ததற்க்கும், திரைப்பட தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கியதற்கு நன்றி சொல்ல இருக்கின்றனர். அந்த நேரத்தில் திரையரங்கு திறப்பது பற்றி விரைவில் நல்ல முடிவு வரும்’என்று தெரிவித்தார்.


  தொடர்ந்து, சசிகலா விடுதலையான பிறகு அ.தி.மு.கவில் மாற்றம் வருமா? என்று செய்தியாளர் கேட்டதற்கு அதெல்லாம் வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்றாா்.
  Published by:Karthick S
  First published: