சேவல் சண்டை போட்டிக்கு அனுமதி கிடைக்குமா? உரிமையாளர்கள் எதிர்பார்ப்பு

Youtube Video

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போன்று சேவல் சண்டை போட்டிக்கும் அனுமதி கிடைக்கும் என்று எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது... அந்த நம்பிக்கையில் தூத்துக்குடி, சேலத்தில் சண்டை சேவல்களை அதன் உரிமையாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர்...

 • Share this:
  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட வீர விளையாட்டுகளின் வரிசையில் சேவல் சண்டைப் போட்டியும் நடத்தப்பட்டு வந்தது. ஆனால், அதிக அளவில் சேவல் சண்டையில் சூதாட்டம் தலைவிரித்து ஆடுவதாகக் கூறி 2009-ல் அந்தப் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டது.

  தற்போது, பல்வேறு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதேபோன்று, சேவல் சண்டைக்கும் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தூத்துக்குடியில் சேவல்களை சண்டைக்கு தயார் படுத்தி வருகின்றனர் அதன் உரிமையாளர்கள்..

   

  ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சண்டை சேவல்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக, சேவலின் வால்பகுதியை கையில் பிடித்துக்கொண்டு பெரிய தண்ணீர் தொட்டிகளில் சுமார் இருபது நிமிடம் வரை நீந்த விட்டு அதன் கால்கள் வலுப்படுத்தப்படுகின்றன.

   

  மேலும், சேவல் சண்டை போட்டிக்கு அரசு அனுமதிக்க வேண்டும் என்று அதன் உரிமையாளர்கள் கோரியுள்ளனர். இதேபோன்று, சேலம் மாவட்டம் குமரகிரி பகுதியிலும் சேவல்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. கூண்டுக்குள் அடைபட்டு கிடக்கும் சண்டை கோழிகளுக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

  போட்டிக்கு 21 நாட்களுக்கு முன்பே சேவல்களை தயார் படுத்த வேண்டும் என்பதால் அரசு விரைந்து அனுமதியளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க... திருமணம் செய்யும்படி நச்சரிப்பு.. சாதியை காரணம் காட்டி காதலியை கொலை செய்த காதலன்

   

  பொங்கல் பண்டிகை நெருங்கி விட்டதால் அனுமதி கிடைக்குமா இல்லையா என்று உறுதியாக தெரியாத நிலையிலும் சேவல் சண்டைக்கு போட்டி ஏற்பாட்டாளர்களும் தயாராகி வருகின்றனர். இருப்பினும், அரசின் முடிவுக்காக சண்டைக் கோழி வளர்ப்போர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: