நான் கட்சிக்காக சாணியும் அள்ளுவேன்.. அவமானமாக கருதமாட்டேன் - கமல்ஹாசன்

நான் கட்சிக்காக சாணியும் அள்ளுவேன்.. அதனை அவமானமாக கருதமாட்டேன் - கமல்ஹாசன்

நான் கட்சிக்காக சாணியும் அள்ளுவேன்; அதனை அவமானமாக கருதமாட்டேன் என்று மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
தமிழகத்தில் நடைபெற உள்ள 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில்  மண்டல செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உட்பட 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது, இது உருமாறிய  மக்கள் நீதி மய்யம் கட்சியாக இருக்கிறது. இதுவார்த்தையாக இருக்ககூடாது. நம்முடைய நோக்கம், கொள்கையில் எந்த நழுவலும் இருக்கக்கூடாது.

Also read: தமிழ்நாட்டில் 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்: அமைச்சர் பொன்முடி

என்னால் முடியாத எதையும் உங்களைச் செய்யச் சொல்ல மாட்டேன், என்னால் முடியும் என்பதை மட்டும் தான் உங்களைச் செய்யச் சொல்வேன். எனக்கு கட்சிக்காக சாணி அள்ளுவது என்பது அவமானம் கிடையாது, நம்முடைய கட்சி கூட்டம் நடைபெறும் இடத்தில் ஒரு மாடு சாணி போட்டிருந்தால் நான் எடுத்துவிடுவேன்.

சுத்தம் செய்ய வேண்டும் என்றால்  நான் சுத்தம்செய்வேம். அதனை இன்னொருவரிடம் செல்லும்போது என்னை மட்டும் சொல்கிறார் என்று எண்ண வேண்டாம். நான் செய்வதை தான் உங்களை செய்யசொல்கிறேன் என்று ஒவ்வொரு தொண்டனும் நம்பவேண்டும்.

என்னால் இயலாததை எதையும் சொல்லமாட்டேன். கட்சி என்பது எனக்கு குடும்பம் தான். எனவே, என் குடும்பத்தில் இருந்து யாரை தவறாக பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். ஏனென்றால், என் குடும்பத்தில் இருக்கும் ஒருவரை பேசுவது என்னை பேசுவதற்கு  சமமாகும். எனவே, அவர்களை நீக்குவது எனக்கு அவமானம் அல்ல. அவர்களுக்குத்தான் அவமானம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Esakki Raja
First published: