முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “காதலர் தினத்தன்று பசுமாட்டை அரவணைப்போம்” - அழைப்பு விடுத்த அர்ஜூன் சம்பத்!

“காதலர் தினத்தன்று பசுமாட்டை அரவணைப்போம்” - அழைப்பு விடுத்த அர்ஜூன் சம்பத்!

அர்ஜூன் சம்பத்

அர்ஜூன் சம்பத்

காதலர் தினம் எனக்கூறி சில அமைப்புகள் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை சீரழிக்கும் வகையில் செயல்படுகின்றனர் - அர்ஜூன் சம்பத்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Vellore, India

காதலர் தினத்தன்று இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் பசுமாட்டை அரவணைக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பஜனை கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அர்ஜூன் சம்பத், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வாணியம்பாடியில் தை பூசத்தை முன்னிட்டு பக்தர் ஒருவர் பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் எனவும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அவர் காவல்துறைக்கு மனு அளித்திருந்தார். ஆனால் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் சரிவர செயல்படவில்லை என குற்றம்சாட்டினர்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “பிப்ரவரி 14ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாக இந்து மக்கள் கட்சி கடைபிடிக்கும். காதலர் தினம் எனக்கூறி சில அமைப்புகள் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை சீரழிக்கும் வகையில் செயல்படுகின்றனர். இந்நிலையில் பிப் 14 அன்று காதலர் தினத்திற்கு பதிலாக பசுமாட்டை அரவணைக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என விலங்குகள் நலவாரியம் கோரிக்கை விடுத்தது. அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அது திரும்ப பெறப்பட்டது. ஆனால் நாங்கள் அதை நடத்தவுள்ளோம்” என தெரிவித்தார்.

First published:

Tags: Arjun Sampath, Cow, Hug Day, Valentine's day