பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்

பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள்

திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இருந்து இயக்கப்படும் குறிப்பிட்ட பேருந்துகளில், குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

 • Share this:
  போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம் அளித்துள்ளார். முதலமைச்சருக்கு இருக்கும் நற்பெயரை கெடுப்பதற்காகவே, ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.

  திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இருந்து இயக்கப்படும் குறிப்பிட்ட பேருந்துகளில், குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாயிலிருந்து 10 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், பெண்களுக்கு இலவச பயணம் வழங்க, ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் விமர்சிக்கப்பட்டது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

  Also Read : ரேஷன் அட்டையில் பெண்களை குடும்ப தலைவியாக மாற்றினால்தான் பணம் கிடைக்குமா? அமைச்சர் கொடுத்த அப்டேட்!

  இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், டிக்கெட் விலை உயர்வு என்பது தவறான தகவல் என தெரிவித்தார். ஓபிஎஸ், அவர் இருப்பை காட்டிக்கொள்வதற்காக, விவரம் அறியாமல் இட்டுக்கட்டி அறிக்கை விட்டிருப்பதாக சாடிய ராஜகண்ணப்பன், ஓரிடத்தில் நடந்த தவறை ஒட்டுமொத்தமாக சொல்வது சரியா? என்றும் வினவினார்.

  அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கைகட்டி அமர்ந்திருப்பதை போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, சாதாரணமான நிகழ்வை சிலர் அரசியல் செய்வதாக அமைச்சர் பதில் அளித்தார்.

  Also Read : மீண்டும் உயரும் தமிழகத்தின் வருவாய்- ஒரே மாதத்தில் ரூ.1000 கோடிக்கு மேல் ஈட்டிய பத்திரப்பதிவுத்துறை

  இதே கருத்தை தெரிவித்துள்ள திருமாவளவன், சோபாவில் உட்காருமாறு ராஜகண்ணப்பன் பலமுறை கூறியும், தானே அதை தவிர்த்துவிட்டு, மற்றொரு இருக்கையில் அமர்ந்ததாக விளக்கம் அளித்துள்ளார். தான் பணிந்துபோய் உட்கார வேண்டிய அவசியமே இல்லை என்றும், குதர்க்கவாதிகள், காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் சேறு பூச வேண்டும் என நினைப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: