அமித்ஷாவுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு? ஏழு தமிழர்கள் விடுதலை குறித்து ஆலோசனை!

அமித்ஷா, பன்வாரிலால் புரோஹித்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைதண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளவன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வலுத்துவருகிறது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  மக்களவைத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றநிலையில், பிரதமர் மோடி, இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவருடைய அமைச்சரவையில் அமித்ஷா, உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

  இந்தநிலையில், இன்று காலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர், அமித்ஷாவைச் சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைதண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளவன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்யவேண்டும் என்று கோரிக்கை வலுத்துவருகிறது. எனவே, இந்தச் சந்திப்பின்போது, தமிழக அரசியல் சூழல் குறித்தும், ஏழு பேர் விடுதலை குறித்தும் பேசப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Also see:

  Published by:Karthick S
  First published: