Home /News /tamil-nadu /

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் விரைவில் உயர்வு?

தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் விரைவில் உயர்வு?

ஆட்டோ கட்டணம்

ஆட்டோ கட்டணம்

ஆட்டோ மீட்டர் கட்டணம் மறுசீரமைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவுகள் இருப்பதாலும் இந்த நடவடிக்கையை அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது.

    தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறுசீரமைப்பது தொடர்பாக போக்குவரத்து இணை ஆணையர் சிவக்குமரன் தலைமையில் ஆட்டோ சங்க பிரதிநிதுகளுடனும் நுகர்வோர் நலச் சங்க பிரதிநிதிகள் உடனும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    ஆட்டோ மீட்டர் கட்டணம் கடைசியாக 8 ஆண்டுகளுக்கு முன் தீர்மானிக்கப்பட்ட போது குறைந்தபட்சம் 1.5 கி.மீ க்கு ரூ.25 எனவும், அதன் பின் ஒவ்வொரு கிமீக்கு ரூ.12 எனவும் தீர்மானிக்கப்பட்டது. தற்போது ஆட்டோ சங்கங்கள் குறைந்தபட்ச தொகையை ரூ.50 எனவும், அதன் பின் ரூ.25 ஒவ்வொரு கி.மீக்கு நிர்ணயிக்க  கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஓலா, உபர் போன்ற செயலியை அரசே உருவாக்கி நடத்துவது தான் நிரந்தர தீர்வு எனவும் கூறியுள்ளன.

    தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 30க்கும் மேற்பட்ட நுகர்வோர் நலச் சங்கங்களுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது.  நுகர்வோர் சங்க பிரதிநிதிகள் கூறுகையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வு என்பது ஆட்டோ ஓட்டுநர்களை மட்டும் பாதிக்கவில்லை என்றும் அனைத்து தரப்பு மக்களின் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது என்று தெரிவித்தார்.

    மேலும் ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்றி அமைப்பதில் குறைந்தபட்சமாக 1.5 கி.மீ 30 ரூபாய் கட்டணமும் அடுத்த ஒவ்வொரு கி.மீ 13 ரூபாய் இருக்க வேண்டும் என நுகர்வோர் அமைப்பு ஆலோசனை கூட்டத்தில் கருத்து தெரிவித்து உள்ளதாகவும், ஜி.பி.எஸ் மீட்டர் அரசே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.

    ALSO READ | தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் சிலைகள் சிதிலம்... கும்பாபிஷேகம் நடத்திட பக்தர்கள் கோரிக்கை

    மற்ற மாநிலங்களில் எவ்வாறு ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதோ, அதேபோன்று தமிழகத்திலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய அவர்கள், அவசர காலத்திற்கு பொதுமக்கள் ஆட்டோவை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் நலன் பாதிக்காத வகையில் அரசு ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக கூறினர்.

    ஆட்டோ கட்டணத்தை உயர்த்தும் போது அதை விஞ்ஞான ரீதியாக செய்ய வேண்டும் என இது குறித்து ஆய்வு செய்துள்ள அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மகாலிங்கம் கூறுகிறார். ஒரே தூரத்துக்கு போக்குவரத்து நெரிசலில் செல்லும் போதும் சாலை காலியான நேரத்தில் செல்லும் போதும் வெவ்வேறு நேரம் ஆகும் என்பதால் ஆட்டோக்களில் தூர கட்டணம் மட்டும் கணக்கிடாமல் நேர கட்டணமும் கணக்கிட வேண்டும் என்கிறார்.

    ALSO READ | பேருந்து கட்டணம் உயர்வா? அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம்

    ஆட்டோ மீட்டர் கட்டணம் மறுசீரமைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவுகள் இருப்பதாலும் இந்த நடவடிக்கையை அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது. சம்பந்தப்பட்டவர்களிடம் ஆலோசனை நடைபெற்று முடிந்துள்ள நிலையில், மீட்டர் கட்டணத்தை உயர்த்துவது குறித்து தனது அறிக்கையை போக்குவரத்து துறைக்கு விரைவில் அனுப்பவுள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Auto

    அடுத்த செய்தி