பாஜகவின் 2 எம்எல்ஏக்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தலைமை இசைவு தெரிவித்தால் அவர்களை
திமுகவுக்கு தூக்கிவிடுவோம் என்றும் அக்கட்சி எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா நேற்று பாஜகவில் இணைந்தார்.பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சூர்யா சிவா தன்னை அக்கட்சியில் இணைத்துகொண்டார். அவருக்கு பாஜக துண்டை அணிவித்து அடிப்படை உறுப்பினர் அட்டையை அண்ணாமலை வழங்கினார். கரு.நாகராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சூர்யா சிவா, திமுகவில் அங்கீகரிக்கப்படவில்லை என வருத்தம் உள்ளது. குடும்ப ரீதியிலான சில பிரச்சனைகளும் உள்ளன. உழைப்புக்கு அங்கீகாரம் குடுக்கும் இடத்தில் இணையவேண்டும் என்பதால் பாஜகவில் இணைந்தேன். நிர்வாகிகளை ஊக்குவிக்கும் தலைவராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளார் என்று பேசியிருந்தார். திமுக எம்பியின் மகன் தங்களது கட்சியில் இணைந்ததால் பாஜகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: உதயநிதியை பிராண்டிங் பண்றாங்க.. திமுகவில் அங்கீகாரம் இல்லை: பாஜகவில் இணைந்த திருச்சி சிவா மகன் பேச்சு
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்பி செந்தில்குமார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”
திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜக உங்களுக்கு ஒரு தகவல். உங்க கட்சியின் #இரண்டு_சட்டமன்ற_உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் துக்கிவிடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.