பட்ஜெட் கூட்டத் தொடர்: 4 சுங்கச்சாவடிகளை நீக்கும் அறிவிப்பு இடம்பெறுமா?

சுங்கச்சாவடி

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர்சென்னை மாநகர எல்லைக்குள் உள்ள 4 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. தற்போது பட்ஜெட் கூட்டத்தொடரில் இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  • Share this:
சென்னை ராஜிவ் காந்தி சாலையில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளையும் நீக்குவது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகுமா என்ற எதிர்ப்பார்ப்பு அப்பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

சென்னை பழைய மாமல்லபுரம் சாலை, 2009ம் ஆண்டு 300 கோடி ரூபாய் செலவில், ஆறு வழி சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, ராஜீவ்காந்தி சாலை என பெயர் மாற்றப்பட்டது. இச்சாலையில், துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், சிறுசேரி ஆகிய பகுதிகளில் ஐந்து சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்களுக்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த சுங்கச் சாவடிகளில் 2009ம் ஆண்டு முதல் இதுவரை 7 முறைக்கு மேல், கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிக்குள் உள்ள சுங்கச்சாவடிகளால் பொருளாதார பாதிப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் அவற்றை அகற்ற  வேண்டும் என  பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘எங்கே போனார் வேலுமணி’: எட்டு மணிநேரம் காணாமல் தவித்த காவல்துறையினர்!


இவற்றை அகற்றக்கோரி கடந்தாண்டு எதிர்கட்சியாக இருந்த திமுக போராட்டம் நடத்தியது. நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதேபோல், தயாநிதிமாறம் அப்போதை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதினார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜீவ் காந்தி சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து கடந்த மாதம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ராஜீவ் காந்தி சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூரில் மேடவாக்கம் சாலை, கலைஞர் கருணாநிதி சாலை என நான்கு சுங்கச் சாவடிகளை ஆய்வு செய்தார்.

மேலும் படிக்க: நீரஜ் என பெயர் வைத்திருந்தால் பெட்ரோல் இலவசம்: கரூரில் கலக்கல் ஆஃபர்!


இந்த சுங்க சாவடிகளின் வருமானம், பணியாளர்களுக்கான மாத ஊதியம், பராமரிப்பு செலவு உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்து, அறிக்கையை தலைமை செயலாளரிடம் வழங்கி உள்ளதாகவும், விரைவில் முதலமைச்சர் இவ்விவகாரத்தில் முடிவெடுப்பார் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சுங்கச்சாவடிகளை நீக்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பாத்திருந்ததாகவும், ஆனால் இதுவரை அறிவிப்பு எதுவும் வராதது ஏமாற்றம் அடைய செய்திருப்பதாக துரைபாக்கம் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரக்கூடிய பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ற ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆட்சி பொறுப்பேற்றதும் சுங்கச்சாவடிகளை அகற்றுவது குறித்த ஆலோச்சித்திருப்பது வரவேற்க கூடியது என்றாலும், 10 ஆண்டுகளுக்கு மேலான கோரிக்கையை, காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றினால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைவார்கள் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
Published by:Murugesh M
First published: