ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மேகதாது பிரச்னை பேசும் அண்ணாமலை கர்நாடகா சென்று போராடுவாரா? .. அன்புமணி ராமதாஸ் கேள்வி

மேகதாது பிரச்னை பேசும் அண்ணாமலை கர்நாடகா சென்று போராடுவாரா? .. அன்புமணி ராமதாஸ் கேள்வி

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

தமிழக அளவில் மட்டுமல்லாது இந்தியாவிலேயே தலைசிறந்த தலைவர் கலைஞர் கருணாநிதி, நிச்சயம் அவரை நாம் போற்றுவோம் - அன்புமணி ராமதாஸ்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சேலத்தில் பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது எனவே அடுத்த தலைமுறையைக் காப்பாற்ற வேண்டும் என்றார்.குறிப்பாக ஒருபக்கம் மதுபழக்கம், மற்றொரு பக்கம் போதைப் பொருட்கள் மேலும் ஆன்லைன் சூதாட்டம் என மூன்றும் அடுத்த தலைமுறை இளைஞர்களை சீரழித்து வருகிறது.

ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகளவில் தற்கொலை  சம்பவம் நடைபெற்று வருவதாக  ஆளுநரிடம் தெரிவித்துள்ளேன். இது தொடர்பான விவரங்களை ஆளுநர் கேட்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக தனி சட்டம் வேண்டும்  என்று பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், கலைஞர் கருணாநிதி எனக்கு மிகவும் பிடித்த தலைவர், சமூக நீதிக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர், இதன் மூலம் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தவர், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கலைஞர் கருணாநிதி இருவரையும் ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கிறேன். தமிழக அளவில் மட்டுமல்லாது இந்தியாவிலேயே தலைசிறந்த தலைவர் கலைஞர் கருணாநிதி, நிச்சயம் அவரை நாம் போற்றுவோம் எனவும் கூறினார்.

தகுதியற்ற மருத்துவர்கள் உருவாக்குவதை தடுக்க தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது, ஆனால் தற்போது நீட் தேர்வு முழுவதும்  வணிகமாகிவிட்டது. இதனால் தகுதியற்ற மாணவர்கள் வசதி படைத்தவர்கள் எனில் அவர்களுக்கு மருத்துவம் படிக்கிறார்கள் தகுதியுள்ள மாணவர்கள் ஏழை என்பதால் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதேபோன்று நீட் விவகாரத்தில் மற்ற மாநிலங்களுடன் தமிழகத்தை ஒப்பிடக்கூடாது.

கடந்த 55 ஆண்டு திராவிட ஆட்சியில் தமிழகத்தில் கல்வி தரத்தை மேம்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாகத்தான் நீட்தேர்வு காரணமாக அதிக உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகையால் தான் குறிப்பிட்ட காலத்திற்கு நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என்று அவகாசம் கேட்கிறோம் எனவும் தெரிவித்தார்.

Also Read: திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் 5-ம் தேதி ரிலீஸ் - நாள் குறித்த அண்ணாமலை

எந்த மாநிலமாக இருந்தாலும் ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையே  சுமூகமாக உறவு இருக்க வேண்டும். இதனால் பாதிக்கப்படுவது நமது மக்கள் தான். இருவரும் அரசியல் செய்யக்கூடாது. தமிழ் மக்களின் பிரச்சினையை புரிந்து கொண்டு அதற்கான தீர்வை கொண்டு வரவேண்டும். இருவருக்குமிடையே கருத்து மோதல் கொள்ளும் சூழல் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாஜக இந்தியாவிலேயே பெரிய கட்சி. தமிழகத்தை பொருத்தவரை  சிறிய கட்சி தான். தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது. தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக பாஜக உள்ளதாக கூறி வருகின்றனர்,  ஆனால்  பாமக தான் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என்ற அன்புமணி, மேகதாது பிரச்சினை குறித்து பேசி வரும் பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகா சென்று போராடுவாரா என்று கேள்வி எழுப்பினார்.

இதுவரை இந்தியாவில் எந்த தலைவரும் 6 இட ஒதுக்கீடுகளை பெற்று தந்தது கிடையாது அதை ராமதாஸ் மட்டும்தான் செய்தார். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு என்பதை ஜாதி ரீதியாக பார்க்க கூடாது. அது  வளர்ச்சிக்கானவை. தமிழக முதல்வர் வன்னியருக்கான இட  ஒதுக்கீடு சட்ட சிக்கல் இல்லாமல் செய்வதாக கூறியுள்ளார். நிச்சயம் நடக்கும் என்று நம்புகிறேன் எனவும் தெரிவித்தார்.

Published by:Ramprasath H
First published:

Tags: Anbumani, Annamalai, BJP, Mekedatu dam, PMK, Tamilnadu