ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுகவில் மு.க.அழகிரி இணைவாரா...? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்

அதிமுகவில் மு.க.அழகிரி இணைவாரா...? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

 • 1 minute read
 • Last Updated :

  முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தனது உள்ளக்குமுறலை வெளிப்படுத்தியிருப்பதாக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

  மதுரையில் தனது ஆதரவாளர் இல்ல திருமண விழாவில் பேசிய அழகிரி, தன்னுடன் அதிமுக-வினர் பேசுவதாகவும், ஆனால், நெருக்கமானவர்களாக இருந்தவர்கள், தன்னை சந்திப்பதை தவிர்ப்பதாகவும் கூறினார். மேலும் தானும் கலைஞரின் மகன் தான் என்றும், மீண்டு வருவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

  இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக-வில் மு.க.அழகிரி இணைவாரா என்பது சந்தேகம் தான் என்றும், யார் இணைந்தாலும் அவர்களை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் கூறினார்.

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: ADMK, AIADMK, K.S.Alagiri, MKStalin, Rajendra balaji