’தி பேமிலி மேன் 2’ தொடரை தடை செய்ய மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துவோம்: அமைச்சர் மனோ தங்கராஜ்

அமைச்சர் மனோ தங்கராஜ்

ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களின் நலன் எந்த சூழலிலும் பாதிக்கப்படாமல் அரசு பாதுகாக்கும் என்று கூறியுள்ளார்.

 • Share this:
  தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதால் ’தி பேமிலி மேன் 2’ தொடரை தடை செய்ய மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துவோம் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

  சென்னை தலைமை செயலகத்தில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில், தகவல் தொழில்நுட்பத்துறை ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் நீரஜ் மிட்டல், எல்காட் நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

  இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், கொரோனா பரவல் மற்றும் மரணங்களை குறைக்க முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மக்களின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ’தி பேமிலி மேன் 2’ தொடரில் தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக குற்றம் சாட்டிய அவர், அதனை தடை செய்ய வேண்டும் என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றும், அதனால் தான் மத்திய அரசுக்கு வலியுறுத்தியதாகவும், மீண்டும் வலியுறுத்தப்படும் என்றும் கூறினார்.

  தொடர்ந்து, பாரத் டெண்டர் விவகாரத்தில் ஒளிவு மறைவு இல்லாத வகையில் வெளிப்படைத்தன்மையோடு கடைப்பிடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

  மேலும், ஆன்லைன் வகுப்புகள் மூலம் மாணவர்களின் நலன் எந்த சூழலிலும் பாதிக்கப்படாமல் அரசு பாதுகாக்கும் என கூறிய அவர், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை சிறந்த துறையாக முன்னேறி வரும் எனவும் கூறினார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: