Home /News /tamil-nadu /

ஒசூரை மையமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுமா? : அமைச்சர் விளக்கம்

ஒசூரை மையமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுமா? : அமைச்சர் விளக்கம்

ஓசூர்

ஓசூர்

Tamil Nadu Assembly : ஒசூர் ஆசியாவிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரமாக உள்ளது, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தமிழக சட்டப்பேரவையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஓசூரை மையமாக வைத்து தனி மாவட்டம் உருவாக்க அரசு ஆவனம் செய்யுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு வருவாய் துறை அமைச்சர் ராமசந்திரன் விளக்கமளித்துப் பேசினார்.

    இது குறித்து தளி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமசந்திரன், ஒசூர் ஆசியாவிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரமாக உள்ளது, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

    இதற்கு, வருவாய் துறையில் சாத்திய கூறுகள் இல்லாததால் ஓசூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படாது என்று வருவாய் துறை அமைச்சர் ராமசந்திரன் விளக்கமளித்துப் பேசினார்.

    இந்நிலையில், கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி கீழ்பெண்ணாத்தூர் தொகுதி திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் வெறையூரில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துவங்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, 38 கிராமங்கள் உள்ள அப்பகுதியில் வங்கி வசதிகள் அங்கு தேவைபடுகிறது. வெரையூரில் கூட்டுவறவு வங்கி துவங்கப்படும். மேலும், வாடகை கட்டிடம் பார்க்கப்பட்டு துறையின் மாவட்ட வங்கி மேலாளலர் வாயிலாக பணிகள் நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

    நகராட்சிகளில் சிறப்பு கவனம் செலுத்தி அடிப்படை வசதிகள்:

    சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தின் போது பேசிய உறுப்பினர் அண்ணாதுரை, பட்டுக்கோட்டை தொகுதி, அதிராம்பட்டினம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தினை சிறப்பு கவனம் செலுத்தி செயல்படுத்த அரசு ஆவண செய்யுமா என கேள்வி எழுப்பினார்.

    Read More : ராஜேந்திர பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு

    இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, அதிராம்பட்டு நகராட்சியில் தற்போது 34,122 மக்கள் தொகை உள்ளதாகவும், 49.92 கி.மீ தூரத்திற்கு சாலைகள், 7.83 கி.மீ தொலைவிற்கு வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வருவதோடு, 7226 குடியிருப்புகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

    Must Read : நம்ம யார் வம்புக்கு போறது இல்ல - போலீஸ் ஸ்டேஷனில் புலம்பிய மாடர்ன் பெண் சாமியார்

    மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தி பணிகளை முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணிகள் முடிக்கப்படும் எனவும் கூறினார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Assembly, Hosur, MK Stalin

    அடுத்த செய்தி