மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு என தகவல்: இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு என தகவல்: இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

மு.கஸ்டாலின்- சீதாராம் யெச்சூரி- பாலிகிருஷ்ணன்

இன்று காலை 11 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 • Share this:
  சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப் பட்டிருப்பதாகவும், அதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

  தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் இம்மாதம் 12 ஆம் தேதி தொடங்க இருக்கின்றது. இதனால், அரசியல் களம் பரபரப்பாகக் காணப்படுகின்றது.

  திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள், இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீட்டு செய்யப்பட்டது. அதேபோல, இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

  அதனைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. கூட்டணி ஒப்பந்தத்தில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் கையெழுத்திட்டனர். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே இன்று தொகுதி பங்கீடு கையெழுத்தாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இந்த ஒப்பந்தம் இன்று காலை 11 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

  இதேபோல, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவுக்கு 15 தொகுதிகள் வரை தருவதற்கு அதிமுக முன்வந்துள்ள சூழ்நிலையில், இன்று மாலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் அதிமுக - தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  Must Read: திருச்சி மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசிய முழு உரை

  அத்துடன், தமாகா உடன் அதிமுக தொகுதி பங்கீடும் இன்று இறுதியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
  Published by:Suresh V
  First published: