கர்நாடக மாநிலம். பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற வனத்துறை வாகனம் முன்பு கம்பீரமாக நடந்து வந்த புலியின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தை அடுத்து கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இப்பகுதியில் கர்நாடக வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளை வனப்பகுதிக்குள் அழைத்துச் செல்வது வழக்கம். வனப்பகுதியில் யானை, மான், காட்டுமாடு போன்ற வனவிலங்குகள் அதிகம் தென்படும் நிலையில் அவற்றை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுண்டு.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு பந்திப்பூர் வனப்பகுதியில் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்ற போது , வனத்துறை வாகனத்தின் முன்பு புலி ஓன்று கம்பீரமாக வந்து நின்றது. திடீரென புலி ஒன்று வாகனம் முன்பு வந்து நின்றதும் சுற்றுலாப் பயணிகள் பயம் கலந்த மனநிலையில் புலியை கண்டு ரசித்தனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலையை அடுத்த கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற வனத்துறை வாகனம் முன்பு கம்பீரமாக நடந்து வந்த புலி. @News18TamilNadupic.twitter.com/x66rQJXqqB
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வாகனத்தை நோக்கி புலி நடந்து வரவே உடனடியாக வனத்துறையினர் வாகனத்தை பின் நோக்கி எடுத்துச் சென்றனர். புலி கம்பீரமாக நடந்து வரும் காட்சியை சுற்றுலாப் பயணிகள் சிலர் தங்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். புலியை நேருக்கு நேர் சந்தித்த அனுபவத்தை சுற்றுலா பயணிகள் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்ட நிலையில் அந்த காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.