• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வனப்பகுதியில் கடும் வறட்சி; தண்ணீரை தேடி குட்டிகளுடன் இடம்பெயரும் காட்டுயானைகள்

வனப்பகுதியில் கடும் வறட்சி; தண்ணீரை தேடி குட்டிகளுடன் இடம்பெயரும் காட்டுயானைகள்

குட்டிகளுடன் இடம்பெரும் காட்டுயானைகள்

குட்டிகளுடன் இடம்பெரும் காட்டுயானைகள்

ஜவளகிரி வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில்,  காட்டுயானைகள் தண்ணீரை தேடி குட்டிகளுடன் இடம்பெயர்ந்து வருகின்றன. 

  • Share this:
    ஜவளகிரி வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில்,  காட்டுயானைகள் தண்ணீரை தேடி குட்டிகளுடன் இடம்பெயர்ந்து வருகின்றன.

    ஒசூர் அருகே தமிழக எல்லைப்பகுதியில் உள்ள ஜவளகிரி வனப்பகுதியில் காட்டுயானைகள், காட்டுஎருமைகள், மான்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் அதிக அளவில் வாழ்கின்றன. தற்போது கோடை காலம் என்பதால் வனப்பகுதியில் வாழும் வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் போதிய அளவில் கிடைப்பதில்லை.

    வனத்துறையினர் பல்வேறு இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைத்து வனவிலங்குகளின் தாகத்தை தீர்த்து வைத்தாலும் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் அவ்வப்போது இடம்பெயர்ந்து வருகின்றன.

    அந்த வகையில் ஜவளகிரி வனப்பகுதியில் இன்று சென்னமாலம் கிராமத்தை ஒட்டிய பகுதியில் 10க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் கூட்டம் உணவு மற்றும் தண்ணீரை தேடி குட்டிகளுடன் வனப்பகுதியின் ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சாலையை கடந்து சென்றன.

    அப்போது சாலையில் மனிதர்கள் நடமாட்டம் உள்ளதா வாகனங்கள் செல்கிறதா என பார்த்து காட்டுயானைகள் கூட்டம் சாலையை கடந்து சென்றன. யானைகள் கூட்டத்தை வழிநடத்தும் பெண் காட்டுயானை முன்னே செல்ல அதன் பின்னர் மற்ற ஆண் பெண் காட்டுயானைகள் அதன் குட்டிகள் தொடர்ந்து சென்றன.

    செய்தியாளர் - செல்வம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: